மனோகர் பரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே கூறியுள்ளார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர். முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சராக அவர் கடந்த 7 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது பனாஜியிலுள்ள தனது வீட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் அவர், வீட்டிலிருந்த படியே நிர்வாக பொறுப்புகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் மனோகர் பரிக்கருக்கு கணைய புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கோவா சட்டசபையில் எதிர்க்கட்சிகள், மாற்று முதலமைச்சரை நியமிக்க வேண்டும் எனக்கூறி வரும் நிலையில் விஷ்வஜித் ரானே இத்தகவலை தெரிவித்தார்.