எம்.எல்.ஏ.க்களுக்கு மம்தா பானர்ஜி வழங்கிய 6 கார்ப்பரேட் மந்திரம்!!

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவர்களுக்கு ஆறு முக்கிய கார்ப்பரேட் மந்திரங்களை சொல்லிக்கொடுத்தார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 12, 2019, 01:50 PM IST
எம்.எல்.ஏ.க்களுக்கு மம்தா பானர்ஜி வழங்கிய 6 கார்ப்பரேட் மந்திரம்!! title=

புதுடெல்லி: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்த பின்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆலோசனை செய்தார்.

2021-ல் மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் (டிஎம்சி) வெற்றியை உறுதி செய்வதற்கான திட்டம் வகுப்பதில் முதலமைச்சரும் டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜி மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். இதன் பின்னர் கொல்கத்தாவில் உள்ள டி.எம்.சி பவனில் தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோனை நடத்தினார். அந்த ஆலோசனையில், கட்சி உறுப்பினர்களுக்கு 6 முக்கியமான கடைபிடிக்க வேண்டிய விதிகளை வழங்கினார்.

மம்தா பானர்ஜி தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதுபோன்ற வழிமுறைகளை வழங்குவது இதுவே முதல் முறை. எம்.எல்.ஏக்கள் மற்றும் மம்தாவின் ஆலோசனை கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் ஈடுபடவில்லை என்றாலும், ஆதாரங்களின்படி, மம்தா அளித்த முக்கியமான பரிந்துரைகளை பிரசாந்த் கிஷோர் தான் சொல்லிக் கொடுத்திருப்பார் எனக் கூறப்படுகிறது. 

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மம்தா பானர்ஜி வழங்கிய கார்ப்பரேட் மந்திரம்:

1. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்தல் சிந்தனையில் இருந்து வெளியே வர வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது. இப்போது பொது பிரதிநிதியாக மாறுங்கள். உங்கள் நேரத்தை சட்டசபையில் 7 நாட்களுக்கு மேல் கொடுங்கள்.

2. எந்தவொரு விவகாரத்திலும் சிக்காதீர்கள். அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

3. நிர்வாகம் மற்றும் காவல்துறையை நம்ப வேண்டாம். உங்களுக்கான அரசியலை நீங்களே உருவாக்குங்கள். சச்சரவுகளைத் தவிர்த்து விடுங்கள். அதில் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் நடத்தை சரியாக வைத்திருங்கள்.

4. நீங்கள் ஏதாவது தவறு செய்தால் மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அவர்களுடன் உட்கார்ந்து பேசுங்கள்.

5. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 4 பேர் கொண்ட குழுவை உருவாக்குங்கள். அந்த குழுவில் ஒரு சமூக ஊடக உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதி மற்றும் ஒரு வாக்குசாவடி மேம்பாட்டு மேலாளரை நியமியுங்கள்.

6. தவறான அறிக்கைகளையோ கருத்துகளையோ யாரும் சொல்லக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர்கள் யாராவது வெளிநாடு பயணம் செல்ல வேண்டும் என்றால், முதலில் கட்சியின் மேலிடத்திக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த ஆறு விதிகளை தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Trending News