மகாராஷ்ட்ராவில் கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானபோதே ஆட்சியமைப்பதில் சிக்கல் உருவானது.
பின்னர் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து பாஜகவுக்கு ‘பகீர்’ காட்டியது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சரானார். இரண்டு பேர் கூட்டணி ஆட்சியே பெரிய விஷயம் இதில் மூன்று கூட்டணி உள்ளதால் நிச்சயம் சீக்கீரமே ஆட்சி கவிழ்ந்துவிடும் எனக் கூறப்பட்டுவந்தது.
ஆனாலும் தொடர்ந்து இழுத்துப் பிடித்து சமாளித்து ஆட்சியை நடத்திவந்தார் உத்தவ் தாக்கரே. ஆனால் கட்சிக்குள் அண்மையில் உருவான திடீர் சிக்கலை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சிவசேனா எம்.எல்.ஏக்கள் பலர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் ஆட்சி கவிழ்ந்தது.
ஆட்சி பாஜக பக்கம்; அதனால் மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதலமைச்சர் ஆவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் சிண்டே முதலமைச்சர் ஆனார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அமலாக்கத் துறையை (ED) வைத்து மிரட்டி சிவசேனா கட்சியினரை தங்கள் பக்கம் இழுத்துள்ளதாக பாஜகமீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவந்தனர். சட்டமன்றத்திலும்கூட இக்குரல் எதிரொலித்தது.
மேலும் படிக்க | குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த 'swiggy' ஊழியர்! வைரல் ஆகும் வீடியோ!
இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், "நான் திரும்பி வருவேன் என அப்போது கூறியபோது பலர் என்னைக் கேலி செய்தார்கள். ஆனால் நான் கூறியதுபோலவே இன்று திரும்பி வந்துள்ளேன்; என்னுடன் சேர்த்து ஏக்நாத் ஷிண்டேவையும் அழைத்து வந்துள்ளேன். என்னைக் கேலி செய்தவர்களை நான் பழிவாங்கமாட்டேன். அரசியலுக்கு இது சரிவராது எனும் காரணத்தால் அவர்களை நான் மன்னித்துவிடுகிறேன்" என்றார்.
'ED கூட்டணி ஆட்சி' என்ற விமர்சனம் பற்றிப் பேசிய அவர், "ஆமாம், நாங்கள் ED ஆட்சியைத்தான் அமைத்துள்ளோம்; அது ஏக்நாத் ஷிண்டே- தேவேந்திர பட்னாவிஸ் இணைந்த கூட்டணி" (Eknath- Devendra) என வார்த்தைகளில் ஜாலம் காட்டிப் பதில் அளித்தார்.
மேலும் படிக்க | அன்று விஜயகாந்த்; இன்று கமல்! இடிக்கப்படுகிறதா ஆழ்வார்பேட்டை ஆபீஸ்? பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR