உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்

Lok Sabha Elections: கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டல் தனது 4 நாள் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று (ஏப்ரல் 16) அவர் கோழிக்கோடு கோடியத்தூரில் ரோடு ஷோக்களை நடத்தினார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2024, 04:58 PM IST
  • மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, வயநாடு இந்த பூமியின் மிக அழகிய இடம் என அறிவித்தார்.
  • இங்கு எப்போது வந்தாலும், என் சொந்த வீட்டிற்கு வரும் உணர்வு ஏற்படுகின்றது: ராகுல் காந்தி.
  • என் அம்மாவையும் இங்கு வந்து இருக்கச் சொல்லி வற்புறுத்தப் போறேன்: ராகுல் காந்தி
உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்  title=

Lok Sabha Elections: இன்னும் சில நாட்களில் நாட்டில் மக்களவைத் தேர்தல்களின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. நாடு முழுதும் முழு மூச்சுடன் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்றது. தேர்தல் களம் களைகட்டியுள்ள இந்த நிலையில், பெரிய அரசியல் தலைவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும், செய்யும் ஒவ்வொரு செயலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது. விமர்சனங்களும் வாழ்த்துகளும் கொடி கட்டி பறக்கின்றன.

வயநாடு தொகுதி, கேரளா

கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டல் தனது 4 நாள் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று (ஏப்ரல் 16) அவர் கோழிக்கோடு கோடியத்தூரில் ரோடு ஷோக்களை நடத்தினார். சுல்தான் பதேரியில் அவர் நடத்திய பேரணியின் போது வயநாட்டை பற்றியும், அங்குள்ள இயற்கை வளம், மக்கள் என அனைத்தையும் புகழ்ந்து பேசினார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, வயநாடு இந்த பூமியின் மிக அழகிய இடம் என அறிவித்தார். மேலும், தனது தாயாரையும் இங்கு சில நாட்கள் தங்க அழைக்கப்போவதாகவும் அவர் கூறினார். 

மலை மாவட்டமான வயநாட்டில் உள்ள சுல்தான் பத்தேரியில் நடந்த பேரணியில், ராகுல் காந்தி, தான் அங்கு வரும்போதெல்லாம், தனது சொந்த வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுவதாக கூறினார். 

“இங்கு எப்போது வந்தாலும், என் சொந்த வீட்டிற்கு வரும் உணர்வு ஏற்படுகின்றது என இன்றுதான் கே சி வேணுகோபாலிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். என் அம்மாவையும் இங்கு வந்து இருக்கச் சொல்லி வற்புறுத்தப் போறேன். அவரை ஒரு மாதத்திற்கு வரச் சொல்லுவேன். ஆனால் அவருக்கு இந்த ஹ்யுமிடிடியால் பிரச்சனை வரலாம். ஆனால், அவர் பூமியின் அழகான இடத்தை பார்க்காமல் இருக்கிறார் என பல முறை அவரிடம் நான் கூறி விட்டேன்” என ராகுல் காந்தி கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

திங்கள்கிழமை, தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்திற்கு விஜயம் செய்த ராகுல் காந்தி, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், அவர் கேரளாவில் உள்ள சுல்தான் பத்தேரிக்குச் சென்றார். அங்கு அவர் ஒரு ஓபன் ரூஃப் காரின் மேல் அமர்ந்து வழக்கத்திற்கு மாறான முறையில் பிரச்சாரம் செய்தார். இதன் மூலம் ரோட் ஷோ முழுவதும் உள்ளூர் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடிந்தது. 

மேலும் படிக்க | அயோத்தியில் கோலாகலமாக ராமநவமி கொண்டாட ஏற்பாடு.. ராம ஜென்மபூமி அறக்கட்டளை தகவல்!

இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்காக காங்கிரஸ் தலைவர் வயநாடு வந்தார். அவர் இந்த மாத தொடக்கத்தில் வயநாட்டில் தனது வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் நடத்திய ரோட் ஷோவிலும் அதிக மக்கள் கலந்துகொண்டனர். 

2019 மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் 4,31,770 என்ற மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அப்பகுதியை தங்கள் கோட்டையாக கருதி செயல்படு வரும் இடதுசாரி கட்சிகள் கேரளாவில் ராகுலின் போட்டியால் கலக்கமடைந்துள்ளன.

கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. கேரளத்தின் மிக பிரபலமான தொகுதிகளில் வயநாடும் ஒன்று. இதை ஒரு விஐபி தொகுதி என்றே கூறலாம். இந்த தொகுதியை எப்போதும் நாடே கவனிப்பது வழக்கம். இதில் இம்முறை காங்கிரஸ்  ( Congress) கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) சார்பில் அன்னி ராஜாவும், பா.ஜ.க. (BJP) சார்பில் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ் கட்சி ஆகிய இரண்டுமே இந்தியா கூட்டணியின் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பிரதமர் மோடி பேட்டி: 'சனாதனம் குறித்து கேவலமான கருத்து...' திமுக மீது சராமாரி குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News