Draupadi Murmu: யார் இந்த திரெளபதி முர்மு: பாஜக ஜனாதிபதி வேட்பாளரின் பின்னணி

குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறங்கும் பழங்குடியினத்தை சேர்ந்த பெண் வேட்பாளர் திரௌபதி முர்மு பற்றிய அனைத்து விவரங்களும் தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 21, 2022, 11:31 PM IST
  • ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் வேட்பாளர் திரெளபதி முர்மு
  • பாரதிய ஜனதா கட்சி சார்பில் களமிறங்கும் திரெளபதி முர்மு
  • கல்வித்துறையை சேர்ந்தவர் திரெளபதி முர்மு
Draupadi Murmu: யார் இந்த திரெளபதி முர்மு: பாஜக ஜனாதிபதி வேட்பாளரின் பின்னணி title=

புதுடெல்லி: குடியரசு தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்தலில் களம் இறக்கப்பட்டிருக்கிறார் திரெளபதி முர்மு. பழங்குடியினத்தை சேர்ந்த பெண் வேட்பாளராக களம் இறங்கிய ஜார்கண்டின் முதல் பெண் கவர்னர்  திரௌபதி முர்மு பற்றிய தகவல்கள் அனைத்தும் உங்களுக்குத் தெரியுமா?

திரௌபதி முர்மு யார் 

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பாய்டாபோசி என்ற கிராமத்தை சேர்ந்த பழங்குடியினப் பெண் திரெளபதி முர்மு, 1958-ம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பிறந்தார். நேற்று பிறந்தநாள் கண்ட அவருக்கு இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது.

சந்தால் சமூகத்தைச் சேர்ந்த பிராஞ்சி நாராயண் டுடுவின் மகளான திரெளபதி முர்மு, புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் படித்தவர். அரசியல் ஆர்வம் காரணமாக திரெளபதி முர்மு பாஜகவில் இணைந்தார்.

மேலும் படிக்க | பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜூன் 25ம் தேதி மனுதாக்கல்

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்த திரெளபதி, 2006 முதல் 2009 வரை எஸ்டி மோர்ச்சாவின் மாநிலத் தலைவராக இருந்தார். ஆசிரியராகப் பணிபுரிந்த திரௌபதி முர்மு, கவுன்சிலராகவும் பின்னர் எம்எல்ஏவாகவும் ஆனார்.

இந்தியாவின் முதல் துணை குடியரசு துணைத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போலவே, திரௌபதி முர்முவும் நீண்ட காலமாக கல்வித் துறையில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் என்று நிம்மதியாக இருந்த திரெளபதியின் மகன்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர். ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன திரெளபதி, ஒடிசா மாநிலத்தின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் 2000-2004 வரை பதவி வகித்தார்.

2015ஆம் ஆண்டு மே 18ம் தேதி முதல் கடந்த ஆண்டு (2021) ஜூலை 12ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்தார் திரெளபதி முர்மு. ஒடிசா மாநிலத்திலிருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரு மாநிலத்தின் ஆளுநராக பணிபுரிந்ததும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

பழங்குடியினரை களம் இறக்கும் என்.டி.ஏ  

2022 குடியரசுத் தலைவர் தேர்தலில் NDA வேட்பாளராக திரௌபதி முர்முவை அறிவிப்பதில் பெருமை கொள்வதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். மேலும், முதன்முறையாக பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பாஜக

திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தி பாஜக எதிர் தரப்புக்கு சவால் விடுத்துள்ளது. இந்த அரசியல் நகர்வு, ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தந்திரம் என்று கூறப்படுகிறது.

பழங்குடியினர் மீது கவனம் செலுத்துவதாக கூறுவதற்கு இந்த நகர்வு பாஜகவுக்கு உதவியாக இருக்கும். விரைவில்  ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பதன் பின்னணியில் திரெளபதி முர்முவின் தேர்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும் படிக்க | ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முட்டாள்த்தனமானது - சீமான்

குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநிலங்களில் கணிசமான அளவில் பழங்குடியினர் உள்ளனர்.என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

பழங்குடியின வாக்காளர்கள் மீது அக்கறையைக் காட்டுவதாக சொல்லும் பாஜகவின் எதிர்கால திட்டத்திற்கு மிகவும் முக்கியமான நகர்வாக திரெளபதி முர்முவின் தேர்வு அமைந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தில் பிறந்த ராம்நாத் கோவிந்த், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டது அந்தக் கட்சிக்கு ஆக்கப்பூர்வமான பெயரை பெற்றுக் கொடுத்தது நினைவிருக்கலாம்.

மேலும் படிக்க | ஒரே நாடு ஒரே தேர்தல் வராது, அதற்கு வாய்ப்பே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News