மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் பினராயி விஜயன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அடுத்தமாதம் அமெரிக்கா செல்கிறார்!

Last Updated : Jul 31, 2018, 11:59 AM IST
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் பினராயி விஜயன்! title=

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அடுத்தமாதம் அமெரிக்கா செல்கிறார்!

அமெரிக்காவில் உள்ள மேயோ கிளினிக்கில் சிகிச்சை பெறுவதற்காக அடுத்தமாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 13 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் அவர் மருத்து சிகிக்கை குறித்தும், அறுவை சிகிச்சைக்கான சாத்தியகூறு குறித்தும் மருத்துவர்களிடன் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி வரும் ஆகஸ்ட் 19-ஆம் நாள் இந்தியாவில் இருந்து அமெரிக்க புறப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய பயணத்திற்கு தேவையான ஒப்புதல்கள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டு விட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 வயது ஆகும் பினராயி விஜயன் அவர்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 3-ஆம் நாள் வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்துக்கொண்டார். 

Trending News