Actor Silambarasan Marriage : கோலிவுட் திரையுலகில், கைக்குழந்தையாக இருந்த போதே அறிமுகப்படுத்தப்பட்டவர், சிலம்பரசன். கூப்பிடுவதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இவரை அனைவரும் சிம்பு என அழைக்க ஆரம்பித்தனர். இவரது தந்தை டி.ஆர்.ராஜேந்திரன் பெண்களையே தொடாமல் நடிக்க, சிம்பு அப்படியே ஆபோசிட்டான நாயகனாக மாறினார். இவர் இருக்கும் படத்தில் கண்டிப்பாக காதலும் காமமும் இல்லாமல் இருக்காது. ஒரு மினி மன்மதனாக திரையுலகில் வலம் வந்த சிம்பு, பல காதல் சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார்.
சிம்புவும் சர்ச்சைகளும்!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு, டீன்-ஏஜர் ஆனவுடனேயே தமிழ் திரையுலகில் நாயகனாக நடிக்க ஆயத்தமானார். 2002ஆம் ஆண்டு வெளியான ‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்தடுத்து நடித்த அலை, கோவில், குத்து, மன்மதன் உள்ளிட்ட படங்கல் இவருக்கு வரவேற்பை பெற்றுதர ஒரு கட்டத்தில் புது விதமான கதைகள் நிறைந்த படத்திலும் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகர் சிம்பு என்றாலே, அவரை சுற்று காதல் சர்ச்சைகளும் இருந்து கொண்டேதான் இருக்கும். அப்படி, அவர் முதன் முதலில் காதலில் விழுந்தவர், நடிகை நயன்தாரா என கூறப்படுகிறது. சில ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள், பின்னர் பிரேக் அப் செய்து விட்டனர். இவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகின. இதையடுத்து சிம்பு நடிகை ஹன்சிகா மோத்வானியை காதலித்து வந்தார். இவர்களின் காதலும் ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே முறிவை சந்தித்தது. காதலினால் ஒரு பக்கம் சர்ச்சைகளை சந்தித்தாலும், நடிகர் சிம்பு தனது படங்கள் மூலமாகவும் தனது பாடல்கள் மூலமாகவும் சர்ச்சைகளை சந்தித்திருக்கிறார்.
நடிகையுடன் காதல்!
நடிகர் சிம்புவும், தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நிதி அகர்வாலும் தற்போது காதலித்து வருவதாக கூறப்படுகிறது. சிம்புவும் இவரும் ஈஸ்வரன் படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இது போதாதென்று இவர்கள் லிவ்-இன் உறவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இருவருமே இது உண்மையான தகவலா அல்லது பொய்யான தகவலா என்பதை விவரிக்கவில்லை.
பெரிய நடிகரின் மகளுடன்..
தமிழ் திரையுலகில் 40களை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகர்கள் வெகு சிலரே இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர், நடிகர் சிலம்பரசன். இவருக்கு தற்போது 41 வயதாகிறது. இவருக்கு இத்தனை ஆண்டுகளாக கம்பெனி கொடுத்து வந்த நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, சிம்புவிற்கு எப்போது திருமணம் என அனைவரும் கேட்க ஆரம்பித்து விட்டனர். இதையடுத்து அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைப்பெற்று வருவதாகவும், பெரிய தெலுங்கு பட நடிகரின் மகள் ஒருவரை சிம்பு திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது, எப்போதும் போல வதந்தியா அல்லது உண்மையான தகவலா என்பது தெரியவில்லை.
நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இதில், அவர் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இதையடுத்து, அவர் அடுத்து ராஜ்குமார் பெரியசாமியின் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க | 40 வயதிலும் 20 வயது வாலிபன் தோற்றம்..! சிம்புவின் இளமைக்கான ரகசியம் என்ன..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ