சர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை ரத்து செய்யக் கோரி கேரள சட்டமன்றம் இன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது!
ஆளும் CPI(M)-LDF மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான UDF இந்த தீர்மானத்தை ஆதரித்தன, பாஜக-வின் தனி MLA மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஓ ராஜகோபால் மட்டும் இந்த தீர்மானத்தில் தனி கருத்து கொண்டிருந்தார். இவரை தவிர முதல்வர் பினராயி விஜயன் முன்வைத்த தீர்மானத்தை சட்டமன்றம் முழுவதும் ஏற்றுக்கொண்டது.
தீர்மானத்தை முன்வைக்கும் போது, திரு விஜயன், CAA நாட்டின் "மதச்சார்பற்ற" கண்ணோட்டத்திற்கும் துணிவுக்கும் எதிரானது என்றும் குடியுரிமை வழங்குவதில் மதம் சார்ந்த பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார். "இந்த சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு முரணானது. நாட்டின் மக்களிடையே உள்ள கவலையைக் கருத்தில் கொண்டு, CAA-வை கைவிட்டு, அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தை நிலைநிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செயல் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடையே பரவலான ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளது என்பதைக் குறிப்பிட்ட முதலமைச்சர், இந்தியாவின் உருவத்தை சர்வதேச சமூகத்தின் முன்னால் மத்திய அரசு முடித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க டிசம்பர் 29 அன்று முதலமைச்சர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தின் போது, சிறப்பு அமர்வு ஒன்றை கூட்டி CAA-க்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு காங்கிரஸ் தலைமையிலான UDF அரசாங்கத்தை கோரியது. இந்நிலையில் இன்று பினராயி தலைமையிலான கேரளா அரசாங்கம் குடியுரிமை திருத்த சட்டத்தினை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர், எனினும் தங்களது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கும் முடிவு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான பொய் போராட்டக்காரர்கள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டி வருகிறது.
இதனிடையே இந்திய அரசியலமைப்புக்கு எதிராக கொண்டுவரப்படும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தங்கள் மாநிலத்தில் அனுமதி இல்லை என கேரளா முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமேரேந்திர சிங் ஆகியோர் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.