வாரணாசி எனக்கு எவ்வளவு முக்கியமோ கேரளாவும் அவ்வளவு முக்கியம்: மோடி

ஆயுஷ்மான் திட்டத்தில் கேரள மக்கள் பயன்பெற மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்!!

Last Updated : Jun 8, 2019, 02:50 PM IST
வாரணாசி எனக்கு எவ்வளவு முக்கியமோ கேரளாவும் அவ்வளவு முக்கியம்: மோடி  title=

ஆயுஷ்மான் திட்டத்தில் கேரள மக்கள் பயன்பெற மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்!!

கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு பிரதமர் மோடி நேர்த்திக்கடன் செய்வதற்காக நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் எர்ணாகுளத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றார். பிறகு கொச்சி கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்ற அவர், அங்கு பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து 'துலாபாரத்தில்' அமர்ந்து தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களைக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டார்.

இதையடுத்து, கேரளாவில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி கூறுகையில்; கேரளாவை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. குருவாயூருடன் எனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. ஜனநாயகத்தை பலப்படுத்த பாடுபட்ட கேரள மக்கள் அனைவருக்கும் நன்றி. 5 ஆண்டுகள் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக நாம் பாடுபட வேண்டும். மக்களின் தீர்ப்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு குருவாயூரும், வாரணாசியும் ஒன்று தான்.

நிபா வைரஸ் பாதுகாப்பிற்கான அனைத்து வசதிகளையும் வழங்குவதில் மத்திய அரசு ஒத்துழைக்கும். கோமாரி நோயை ஒழிக்க கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்களை நாடு முழுவதும் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு 130 கோடி மக்களை முன்னெடுத்து எங்களின் பொறுப்பு அதிகரித்துள்ளது. ஒரு அரசை உருவாக்க மட்டுமே அரசியலுக்கு  வரவில்லை. நாட்டை முனேற்ற நாம் இங்கே இருக்கிறோம், உலகில் இந்தியா தனது சரியான இடத்தை பெறுவதைப் பார்ப்பதற்கு நாம் தவம் கிடக்கிறோம். 

வருடத்தின் 365 நாட்களும் உழைப்பவர்கள் பாஜக தொண்டர்கள். வெற்றியும், தோல்வியும் நமது இலக்கை பாதிக்காது. மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைய கேரள அரசு மறுத்து வருகிறது. ஆயுஷ்மான் திட்டத்தில் கேரள மக்கள் பயன்பெற மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

 

Trending News