அன்பைக் காட்ட நல்ல வழி புத்தகமே! மாலை-சால்வை வேண்டாம்! சித்தராமையா வேண்டுகோள்

Siddaramaiah Request For Gift: 'பூக்களையோ சால்வைகளையோ ஏற்கமாட்டேன், அன்பை வெளிப்படுத்த விரும்பினால் புத்தகங்களைக் கொடுங்கள்' என புதிய கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 22, 2023, 02:26 PM IST
  • கர்நாடக முதலமைச்சரின் அன்பான வேண்டுகோள்
  • அன்பை வெளிப்படுத்த சிறந்த வழி புத்தகப் பரிசு
  • சால்வையும் மலர்களையும் தவிர்க்க வேண்டுகோள் விடுக்கும் கர்நாடக முதல்வர்
அன்பைக் காட்ட நல்ல வழி புத்தகமே! மாலை-சால்வை வேண்டாம்! சித்தராமையா வேண்டுகோள் title=

பெங்களூரு: பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற பிரமாண்ட விழாவில் சித்தராமையா கர்நாடக முதல்வராக பதவியேற்ற சித்தராமயா, அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு வேண்டுக்கோளை வெளியிட்டு பலரின் வரவேற்பையும் பெற்றார். அப்படி அவர் என்ன சொன்னா? பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் தனக்கு, அன்பின் வெளிப்பாடாக, மலர்கள் அல்லது சால்வைகளை கொடுப்பதைவிட புத்தகங்களை கொடுப்பதையே விரும்புவதாக புதிய கர்நாடக மாநில முதலமைச்சர் கூறினார்.

இது குறித்து சித்தராமையா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ", தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளின் போதுஎனக்கு மரியாதை செலுத்த விரும்புபவர்கள், பூக்கள் அல்லது சால்வைகளைக் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். 

மக்கள் தங்கள் அன்பையும் மரியாதையையும் பரிசுகளாக வெளிப்படுத்த விரும்பினால் புத்தகங்களை வழங்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் கூறினார். "உங்கள் அன்பும் பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | பதவியேற்பு விழா முடிவடைந்தது! தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நேரம் இது

தனக்கான ஜீரோ டிராஃபிக் நெறிமுறையை திரும்பப் பெறுமாறு பெங்களூரு காவல்துறையினரை சித்தராமையா கேட்டுக் கொண்டார், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

"ஜீரோ டிராஃபிக்' காரணமாக கட்டுப்பாடுகள் உள்ள பாதையில் பயணிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பார்த்து நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும், எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியுடன் ஒற்றுமையைக் குறிக்கும் மெகா நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சி (BJP) அல்லாத சில மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கர்நாடக மாநில அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

75 வயதான சித்தராமையா, 2013இல், முதன்முறையாக கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார். தற்போது, ஐந்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.

மேலும் படிக்க | Karnataka Govt: கர்நாடக புதிய அமைச்சரவையில் மல்லிகார்ஜுன மகன் பிரியங்க் கார்கே

அதைத் தொடர்ந்து, புதிய அரசு, அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பதவியேற்பு விழா முடிந்த உடனேயே, மே 10-ம் தேதி கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வாக்குறுதியளிக்கப்பட்ட காங்கிரஸின் ஐந்து 'உத்தரவாத திட்டங்களுக்கு' ஒப்புதல் அளித்தது.

தேர்தல் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதால் கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி செலவாகும் என்று மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி, ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சித்தராமையா, தேர்தலுக்கு முந்தைய உறுதிமொழிகள் காரணமாக ஏற்படக்கூடிய செலவினங்களை உறுதியாக சமாளிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

224 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியைப் பெற்றது, அதே நேரத்தில் பாஜக மற்றும் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா தலைமையிலான ஜனதா தளம் (மதச்சார்பற்ற) முறையே 66 மற்றும் 19 இடங்களைப் பெற்றன.

மேலும் படிக்க: Karnataka: முதல்வர் தேர்வில் கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்ற கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News