கார்கில் நினைவு நாள் 2022: கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் கார்கில் விஜய் திவஸ் நாளான இன்று புதுவையில் நாட்டின் தலைமகன்களை நினைவுகூரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 1999 ஜூலை 26ம் நாளன்று, காஷ்மீரில் பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இந்திய வீரர்கள் மீண்டும் கைப்பற்றினர். இந்திய வீரர்களின் வெற்றி மற்றும் தியாகத்தை கொண்டாடும் இந்த நாள் புதுச்சேரியில் அனுசரிக்கப்படுகிறது.
கார்கில் போரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்தும் விதமாக, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் மலர்வலையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
கார்கில் போரில் இறுதியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தாலும், இந்தப் போரில் 500க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். தாயகத்தை காக்க உயிர் நீத்த இந்திய வீரர்களில் தியாகத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக இந்த நாள் கார்கில் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | கார்கில் தினத்தன்று வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி
கார்கில் வெற்றி தின கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் கார்கில் தினம் அனுசரிக்கப்படுகிறது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் படிக்க | உங்கள் வீட்டு நாயை பராமரிக்க காவலர் வேண்டுமா ? ஆர்டர்லி முறைக்கு நீதிபதி சரமாரிக் கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ