இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா, நேற்றுடன் (அக்டோபர் 2 ஆம் நாள்) ஓய்வு பெற்றார். இதனால் கடந்த செப்டம்பர் 13 ஆம் நாள் நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய்யை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
Delhi: Justice Ranjan Gogoi takes oath as the Chief Justice of India (CJI) at Rashtrapati Bhavan. pic.twitter.com/g8d6HsSzgL
— ANI (@ANI) October 3, 2018
இந்நிலையில், இன்று தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவியேற்றுக்கொண்டார். இவர் 46_வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள முதல் தலைமை நீதிபதி இவர் ஆவார். இவர் அடுத்த ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் வரை தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.
Delhi: Justice Ranjan Gogoi sworn-in as the Chief Justice of India (CJI) at Rashtrapati Bhavan. pic.twitter.com/uvjSEVK16Y
— ANI (@ANI) October 3, 2018
நீதிபதி ரஞ்சன் கோகோய் கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் நாள் குவாஹாட்டி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் பிப்ரவரி 12, 2011 ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார்.