ஜார்க்கண்ட் பந்தயத்தில் JMM கூட்டணி முன்னணி; எதிர்பார்ப்பில் பாஜக..

ஜார்க்கண்ட் பந்தயத்தில் ஜே.எம்.எம். கூட்டணி முன்னணி பெற்று வருகிறது. அதேவேலையில் போட்டி இன்னும் முடிவடையவில்லை என பாஜக கூறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2019, 02:13 PM IST
ஜார்க்கண்ட் பந்தயத்தில் JMM கூட்டணி முன்னணி; எதிர்பார்ப்பில் பாஜக.. title=

புது டெல்லி: ஜார்க்கண்ட் பந்தயத்தில் ஜே.எம்.எம். கூட்டணி முன்னணி பெற்று வருகிறது. அதேவேலையில் போட்டி இன்னும் முடிவடையவில்லை என பாஜக கூறியுள்ளது.ஜார்க்கண்டில் வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கள்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. அங்கு ஆளும் பாஜக தனியாக போட்டியிட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) உடன் கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு மொத்தம் 81 தொகுதிகள் உண்டு. அந்த மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆரம்பத்தில் ஆளும் பாஜக முன்னணி வகித்தாலும், அடுத்தடுத்து சுற்றுகளில் ஜேஎம்எம் + காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றது. அதுவும் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் வெற்றி பெரும் நிலை உருவாகி உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி பாஜக 31 இடங்களிலும், ஜேஎம்எம் + காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களிலும், மற்றவவை 9 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.

ஜார்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ), மற்றும் லோக் ஜான்சக்தி கட்சி (எல்.ஜே.பி) ஆகியவையும் களத்தில் இறங்கி தனியாக போட்டியிட்டனர். காங்கிரஸ்-ஜே.எம்.எம் கூட்டணி பழங்குடியினரின் பிரச்சனை மற்றும் பாஜக தலைமையிலான ரகுபார் தாஸ் அரசாங்கம் ஊழல் போன்ற விசியங்களை முன்னிறுத்தி பிரசாரத்தை மேற்கொண்டனர். அதேபோல பாஜக தனது பங்குக்கு தேசியவாதம், முத்தலாக் மற்றும் ராமர் கோயில் ஆகியவற்றைச் சுற்றி தனது பிரச்சாரத்தை மையப்படுத்தியது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வெளியான கருத்துக் கணிப்புகள் 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. தொங்கும் அரசு தான் ஏற்படும் என கணித்துள்ளன. 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News