மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு!!

ஜூலை மாதம் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு..!

Last Updated : Jul 3, 2020, 08:38 PM IST
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு!! title=

ஜூலை மாதம் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு..!

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், JEE மெயின் மற்றும் NEET 2020 தேர்வுகளை ஒத்திவைக்கும் முடிவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இன்று அறிவித்தார். JEE தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரை, JEE அட்வான்ஷ்டு தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (NEET) செப்டம்பர் 13 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து மருத்துவ நுழைவுத் தேர்வு மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அமைத்த குழு பரிந்துரைத்துள்ளது. ஜூலை மாதம் பரீட்சைகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை சரிபார்க்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது. COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து பெற்றோர்களும் மாணவர்களும் JEE மற்றும் NEET தேர்வுகள் குறித்து கவலைகளை எழுப்பினர்.

"JEE மற்றும் NEET தேர்வுகளுக்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் கோரிக்கைகளைப் பார்க்கும்போது, தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.ஏ) மற்றும் பிற நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு நிலைமையை மறுபரிசீலனை செய்து குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள வல்லுனர்கள் அடங்கிய குழுவிடம் நாளை (அதாவது இன்று) இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

READ | நாடு முழுவதும் ஜூலை 31 வரை விமான சேவைகள் ரத்து: DGCA

மருத்துவ நுழைவுத் தேர்வு NEET ஜூலை 26 அன்றும், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான JEE (Mains) ஜூலை 18 முதல் 23 வரை நடத்த திட்டமிடபட்டிருந்தது. இந்நிலையில், ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், JEE முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 4,000 என்.ஆர்.ஐ மாணவர்களின் பெற்றோரும் நீட் ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தது குறிப்பிடதக்கது. 

Trending News