ஜம்மு: தீவிரவாதிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுக்கள் பறிமுதல்

காஷ்மீரில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Nov 22, 2016, 02:53 PM IST
ஜம்மு: தீவிரவாதிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுக்கள் பறிமுதல் title=

ஸ்ரீநகர்: காஷ்மீரில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையை தொடங்கினர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கருப்பு பணம், கள்ள நோட்டு மற்றும் பயங்கரவாத நிதியகத்தை ஒழிக்கவே இந்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை அரசு வெளியிட்டது.

ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியிலுள்ள வங்கியில் நேற்று ஆயுதம் தங்கிய கும்பல் ரூ 13 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News