அமெரிக்காவின் நிலை இந்தியாவுக்கு ஏற்படும் என மத்திய அரசை எச்சரித்த மெஹபூபா முப்தி

புது டெல்லி:  எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம். எங்கள் பொறுமையை இழக்கும் நாளில், நீங்களும் அங்கு இருக்க மாட்டீர்கள். நீங்கள் காணமல் போய் விடுவீர்கள் என ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா மத்திய அரசை சாடியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2021, 07:10 PM IST
  • ஜம்மு -காஷ்மீரில் 370 வது பிரிவை மீண்டும் அமல்படுத்தி வேண்டும்.
  • துப்பாக்கிகளின் பங்கு முடிந்துவிட்டது என்பதை தாலிபான்கள் உணரவேண்டும்.
  • பாஜக ஆட்சியில் இருந்திருந்தால், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்காது.
அமெரிக்காவின் நிலை இந்தியாவுக்கு ஏற்படும் என மத்திய அரசை எச்சரித்த மெஹபூபா முப்தி title=

புது டெல்லி: ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி சனிக்கிழமை தாலிபான்களை மேற்கோள்காட்டி மத்திய அரசை குறிவைத்தார். ஜம்மு காஷ்மீர் மக்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். ஜம்மு -காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என முஃப்தி கூறினார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவை வெளியேறும்படி  தாலிபான்கள் கட்டாயப்படுத்தினர். எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம். எங்கள் பொறுமையை இழக்கும் நாளில், நீங்களும் அங்கு இருக்க மாட்டீர்கள். நீங்கள் காணமல் போய் விடுவீர்கள் என மத்திய அரசை சாடியுள்ளார்.

ஜம்மு -காஷ்மீரில் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு விரும்பினால், 370 வது பிரிவை மீண்டும் அமல்படுத்தி வேண்டும் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என மெஹபூபா முப்தி கூறினார். 

அமெரிக்காவை தப்பி ஓடும்படி தாலிபான் கட்டாயப்படுத்தியது:
குல்காமில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய மெகபூபா முஃப்தி, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். ஆனால் தாலிபான்களின் நடத்தையை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது. தாலிபான்கள் உலகை தங்களுக்கு எதிராகத் திருப்பும் எதையும் செய்ய வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். துப்பாக்கிகளின் பங்கு முடிந்துவிட்டது என்பதை தாலிபான்கள் உணரவேண்டும். தாலிபான்கள் மக்களை எப்படி நடத்துவார்கள் என்பதை அறிந்துக்கொள்ள உலக சமூகம் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது என்றார்.

ALSO READ | ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபாவின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிப்பு

1947 ல் பாஜக ஆட்சியில் இருந்திருந்தால், காஷ்மீர் இந்தியாவில் இருந்திருக்காது:
மேலும் பேசிய முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, 1947 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜம்மு -காஷ்மீர் பாரம்பரியம் மற்றும் மக்களின் அடையாளம் எல்லா வகையிலும் பாதுகாக்கப்படும் என்றும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் போது பாஜக ஆட்சியில் இருந்திருந்தால், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்காது என்றார்.

ஏஜென்சிகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வகுப்புவாத மற்றும் மத அடிப்படையில் இந்தியா பகுதிகளாகப் பிரிக்க பாஜக தயாராக உள்ளது என்றார்.

ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி:
மெகபூபா முப்தி அறிக்கையை அடுத்து, நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'இந்த நேரத்தில் இதுபோன்ற அறிக்கையை முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தவிர்க்க வேண்டும் என்று கூறினார். ஜம்மு -காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இருந்து வருகிறது என்றார்.

ALSO READ | பாலியல் அடிமை முதல் தீக்குளிப்பது வரை; ஆப்கான் பெண் நீதிபதி விவரித்த திகில் சம்பவங்கள்

மெகபூபா முப்தியை குறிவைத்த பாஜக மாநிலத் தலைவர்:
மறுபுறம், பிஜேபி மாநில தலைவர் ரவீந்திர ரெய்னா பிடிபி தலைவர் மெஹபூபா முப்தியை குறிவைத்து, 'இந்தியா ஒரு வலிமையான நாடு. எங்கள் பிரதமர் நரேந்திர மோடி, ஜோ பைடன் அல்ல. அனைத்து பயங்கரவாதிகளையும் ஒழிப்போம். மெஹபூபா முஃப்தி ஒரு துரோகி. அவர்கள் தேசத்துரோகத்தில் ஈடுபடுகிறார்கள். அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேசபக்தி மக்களை அவமதித்துள்ளார். மெகபூபா முப்தி காஷ்மீரில் தாலிபான் ஆட்சியை விரும்புகிறார். ஆனால் எங்கள் அரசு அனைத்து பயங்கரவாதிகளையும் அழித்துவிடும் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News