ஜம்மு தலைவர்கள் பாருக், ஒமர் அப்துல்லாவை சந்திக்க ஆளுநர் அனுமதி!

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் சனிக்கிழமை கட்சித் தலைவர் ஃபாரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரைச் சந்திக்க ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டின் 15 பேர் கொண்ட குழுவுக்கு சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளார்!

Last Updated : Oct 5, 2019, 08:02 PM IST
ஜம்மு தலைவர்கள் பாருக், ஒமர் அப்துல்லாவை சந்திக்க ஆளுநர் அனுமதி! title=

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் சனிக்கிழமை கட்சித் தலைவர் ஃபாரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரைச் சந்திக்க ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டின் 15 பேர் கொண்ட குழுவுக்கு சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளார்!

81 வயதான ஃபாரூக் தனது ஸ்ரீநகர் இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகனும், என்.சி துணைத் தலைவருமான உமர் ஒரு மாநில விருந்தினர் மாளிகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் பாரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரைச் சந்திக்க ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டின் 15 பேர் கொண்ட குழுவுக்கு சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளார். இந்த தூதுக்குழு மாகாண அதிபர் தேவேந்தர் சிங் ராணா தலைமையிலானது மற்றும் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. முன்னதாக இச்சந்திப்பு குறித்து ஆளுநர் மாலிக் அவர்களிடம் ராணா அனுமதி கோரியிருந்தாதக கூறப்படுகிறது.

ANI-யுடன் பேசிய ராணா, "இன்று, ஃபாரூக் மற்றும் உமர் அப்துல்லாவை சந்திக்க ஒரு தூதுக்குழு அனுமதிக்கப்படும் என்பதற்கான உறுதிப்படுத்தல் எங்களுக்கு கிடைத்தது. தேசிய மாநாட்டு தலைவர்களின் 15 பேர் கொண்ட குழு, அவர்கள் அனைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாளை காலை ஸ்ரீநகருக்கு செல்கின்றனர்." என தெரிவித்துள்ளார்.

சட்டப்பிரிவு 370-ன் கீழ் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கைவிட்டதிலிருந்து, ஃபாரூக் மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்களையும், மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களையும் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து என்.சி தலைவர்கள் வேதனை தெரிவித்தனர்.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் மதன் மந்தூ கூறுகையில், என்.சி உறுப்பினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு அவசர கூட்டத்தில் உயர் தலைமையை சந்திக்க முடிவு செய்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News