சந்திரயான்-3: வியாழன் அன்று, சந்திரனுக்கு இந்தியாவின் மூன்றாவது பயணத்தை முன்னிட்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் அதன் வெற்றிக்காக திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் பிரார்த்தனை செய்தனர். சந்திரயான்-3 விண்கலம் வெள்ளிக்கிழமை மதியம் 2:35 மணிக்கு ஏவப்படும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படும் சந்திரயான்-3 சந்திர மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கி, அதை ரோவர் மூலம் ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு, திருப்பதியில் சந்திரயான்-3 விணகலத்தின் சிறிய மாதிரியை வைத்து பூஜை செய்தனர். ஒவ்வொரு முக்கிய பணிக்கும் முன்பு, இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோவிலில் அதன் வெற்றிக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம். சந்திராயன் விண்கலம் ஒரு வெற்றிகரமான நிலவில் தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவை நான்காவது நாடாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய நாடாக இருக்கும்.நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. இது சுற்றுப்பாதையை சென்றடைந்த போதிலும் தொழில்நுட்ப கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கருவி தரையிறங்காமல் நிலவிலேயே மோதி செயலிழந்தது.
மேலும் படிக்க | சந்திரயான்-3 விரைவில் விண்ணில் சீறிப் பாயும்: ISRO
சந்திரயான் 2 திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் ரூ.615 கோடியில் சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் ள்# 3 எம் 4 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து நாளை பிற்பகல் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ள நிலையில், இன்று(ஜூலை 13) மதியம் 1.05 மணிக்கு கவுண்ட் டவுன் தொடங்குகிறது.
இஸ்ரோ கடந்த பல காலமாகவே சந்திரயான், மங்கள்யான் என்று தொடர்ச்சியாக விண்வெளித் துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. பல்வேறு ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்து வரும் ISRO, கடந்த மார்ச் 26 அன்று, ஒரே நேரத்தில் 36 ஒன்வெப் (OneWeb) சாட்டிலைட்களை அனுப்பி புதிய மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இணைப்பை மேம்படுத்துவதற்கான OneWeb பணிகளுக்கு மிகப்பெரிய முதலீட்டாளரான பாரதி குளோபல் பெரிய அளவில் உதவி வருகிறது.
மேலும் படிக்க | எல்லை தாண்டிய PUBG காதல்... இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ