வரும் திங்களன்று பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்!!
நிலவை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் வெற்றித் திட்டமான சந்திரயான் - 1- ஐத் தொடர்ந்து, இதுவரை யாரும் செல்லாத நிலவின் தென் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 திட்டம் வகுக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பான இந்த விண்கலம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சினிலில் இயங்கும் GSLV மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவுக்கு பயணம் செய்ய இருந்தது.
இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவப்படுவது திடீர் என நிறுத்தப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் தான் அதை விண்ணில் செலுத்த முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுபற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லாமல் இருந்தனர்.
தற்போது ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் இணைந்து பணியாற்றி சரி செய்து விட்டதாக ‘இஸ்ரோ’ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் சந்திரயான்-2 ஜூலை 22 ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
Indian Space Research Organisation (ISRO): Chandrayaan-2 launch, which was called off due to a technical snag on July 15, 2019, is now rescheduled at 2:43 pm IST on July 22, 2019. #Chandrayaan2 pic.twitter.com/zy62eISQQA
— ANI (@ANI) July 18, 2019
சந்திரனை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்‘ என்ற சாதனம், சந்திரனில் தரை இறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்‘ என்ற சாதனம், அங்கு தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்‘ என்ற சாதனம் என மொத்தம் 3 சாதனங்கள் சந்திரயான்-2 விண்கலத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்ப நிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.