சுகாதார அமைச்சகம் கோவிட் தடுப்பூசியை ₹6,000-க்கு வழங்குகிறதா? உண்மை என்ன..!!!

மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ₹4,000- ₹6,000-க்கு வழங்குவதாக மிக வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 11, 2021, 06:04 PM IST
  • முதல் கட்டத்தில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் மருத்து செலுத்தும் பணி வரும் 13ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு.
  • மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ₹4,000- ₹6,000-க்கு வழங்குவதாக மிக வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது.
  • 26 நாட்களில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை போட்டு சாதனை படைத்துள்ள இந்தியா
சுகாதார அமைச்சகம் கோவிட் தடுப்பூசியை ₹6,000-க்கு வழங்குகிறதா? உண்மை என்ன..!!! title=

இந்தியாவில், மேட் இன் இந்தியா தடுப்பூசியான, கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும், அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து, கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16ம் தேதி தொடங்கியது.  26 நாட்களில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை போட்டு சாதனை படைத்துள்ள இந்தியா, உலகின் மிக விரைவாக, இந்த அளவு தடுப்பூசி போட்ட நாடாக உள்ளது. இது வரை போடப்பட்டுள்ள 70,17,114 மொத்த தடுப்பூசிகளில்  57,05,228 தடுப்பூசிகள்  சுகாதார ஊழியர்கள், மற்றும் 13,11,886 முன் களப்பணியாளர்கள் அடங்கும். மொத்தம் 1,43,056 அமர்வுகளில், இந்த அளவிற்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
https://zeenews.india.com/tamil/health/twenty-five-countries-are-waiting...

இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் (Corona Virus)தடுப்பூசிகளை ₹4,000- ₹6,000-க்கு வழங்குவதாக மிக வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்ற கேள்வி எழுந்துள்ளது

சுகாதார அமைச்சகம் (Health Ministry) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ .4,000-6,000 க்கு கோவிட் தடுப்பூசியை வழங்கி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது

PIB Fact Check இந்த தகவலை நிராகரித்ததோடு, 'mohfw.xyz' வலைத்தளம் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் போல் உள்ள ஒரு போலி வலைதளம் என்றும் கூறியுள்ளது.
முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் மருத்து செலுத்தும் பணி வரும் 13ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | COVID-19 வெறும் ட்ரைலர் தான்.. மெயின் பிக்சர் இனிமேல் தான்: Bill Gates

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News