புதுடெல்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்திய வேளாண் சட்டங்கள் தொடர்பாக தலைநகர்டெல்லியின் எல்லையில் ஓராண்டாக மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மேற்கொண்ட நீண்ட போராட்டம், அவர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்ட பிறகு முடிவுக்கு வந்தது. ஆனால், தற்போது, விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மற்றும் பல பிரச்சனைகளுக்காக புதிய போராட்டத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது. விவசாயிகளின் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு தலைநகர் டெல்லியின் திக்ரி எல்லையில் சிமென்ட் தடுப்புகளை அமைக்கும் பணியை டெல்லி காவல்துறை மீண்டும் தொடங்கியுள்ளது.
மறுபுறம், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும், அதற்கான நேரம் விரைவில் முடிவு செய்யப்படும் என்று விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் கூறினார்.
மேலும் படிக்க | இமாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையிக்கு 22 பேர் பலி
விவசாயிகளின் கோரிக்கை அரசு ஏற்றுக் கொண்டபோது, மத்திய அரசு (Centre withdraws Farm laws) உறுதிமொழிகளை எழுத்துப்பூர்வமாக அளித்தது. அதன்படி, குறைந்தபட்ச நிர்ணய விலை தொடர்பாக ஒரு குழுவை அமைப்பதாகவும், விவசாயிகள் மீதான வழக்குகளை உடனடியாக வாபஸ் பெறுவதாகவும் மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
அறிவித்தபடி அரசு, குழு ஒன்றை அமைத்தபோது, ஐக்கிய கிசான் மோர்ச்சா அதை முற்றிலுமாக நிராகரித்ததுடன், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதற்கு எதிரானவர்கள் அதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டியது.
தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 22) அன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடக்கும்; பாக்., எண்ணில் இருந்து வந்த எச்சரிக்கை
ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்திற்குத் தயாராகும் விவசாயிகள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டெல்லி வந்தடைந்துள்ளனர். விவசாயிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு திக்ரி எல்லையில் பெரிய சிமென்ட் தடுப்புகளை போட்டு சாலையை மூடும் பணியில் டெல்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த முறையும் டெல்லி காவல்துறை இதேபோல் டெல்லியின் மூன்று எல்லைகளிலும் விவசாயிகளை தடுத்து நிறுத்தியதும், விவசாயிகள் இந்த எல்லைகளில் ஒரு வருடமாக ஆர்ப்பாட்டம் நடத்தியதும் நினைவுகூரத்தக்கது.
விவசாயிகள் இயக்கம்
விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயித்தை டெல்லி போலீசார் காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தினர். பின்னர் சில ஆதரவாளர்களுடன் மட்டுமாவது டெல்லி செல்வதாக ராகேஷ் டிகாயிட் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க | மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட்நோட்டீஸ்
ஆனால் போலீசார் அதற்கும் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, ராகேஷ் திகாயித் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதைப் பார்த்த டெல்லி போலீசார், ராகேஷ் திகாயித் மற்றும் அவரது ஆதரவாளர்களை முத் விஹார் போலீஸ் ஏசிபி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
MSP உத்தரவாதம் மற்றும் அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை
விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க நாடு தழுவிய போராட்டத்திற்கு மீண்டும் தயாராக வேண்டும் என்று ராகேஷ் திகாயிட் அழைப்பு விடுத்திருந்தார். இந்த போராட்டம் எப்போது நடக்கும், எப்படி நடக்கும் என்பது குறித்து சரியான நேரத்தில் தகவல் தருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது காரை மோதியதில் பலர் இறந்தனர். இந்த வழக்கில் அவர் சிறையில் உள்ளார்.
மேலும் படிக்க | தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த தீவிரவாதி தமிழகத்தில் கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ