இன்று நாடு முழுவதும் 68-வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
குடியரசுதின விழாவை முன்னிட்டு இசை முழக்கத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் ஹேங்பன் தாதாவுக்கு அசோக் சக்ரா விருதை அவருடைய மனைவியிடம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். பின் நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரணாப் ஏற்று கொண்டார்.
Glimpses of #RepublicDay Parade at Rajpath, New Delhi: https://t.co/sde5JnBVVn pic.twitter.com/rOnzNwRiUz
— MIB India (@MIB_India) January 26, 2017
இந்த விழாவில் அபுதாபி இளவரசர் முஹம்மது பின் சயீத் அல் நயான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாவில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஹசித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்னர்.
#RepublicDay 2017: Gallantry Awards- Ashoka Chakra https://t.co/sde5JnBVVn pic.twitter.com/Dt8ui5Cozv
— MIB India (@MIB_India) January 26, 2017
குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பினர் குடியரசு தின விழாவின் போது நாசவேலையில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 60,000 மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.