பொருளாதாரத்திற்கான வழிப்பாதை என்ன? – இந்தியா எதிர்கொள்ளும் தடைகளும் வாய்ப்புகளும்!!
கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக கடுமையாகத் தாக்கியுள்ளது. உலக பொருளாதாரம் ஆழ்ந்த மந்தநிலை என்ற வலையில் சிக்கிக்கொண்டுள்ளது. இப்போது புதிய சாத்தியங்களை ஆராய வேண்டியது அவசியமாகும். இந்தியாவும் அதே பாதையில் செல்கிறது. பிரதமர் மோடி, CII 125 ஆண்டு நிறைவையொட்டி, தொழிலதிபர்களுடன் பேசியபோது, ' நம் வளர்ச்சியை நாம் திரும்பப் பெறுவோம்' என்று கூறி நம்பிக்கையின் ஒளியை மேலும் பிரகாசமாக்கினார்.
கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் லாக்டௌன் ஆகியவை இந்தியாவின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளன. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில், நாட்டின் வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டை விட குறைந்து 3.1 சதவீதமாக உள்ளது. இது 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த நிலையாகும்.
ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவைக் கொண்டிருக்கும் நிலையில், வளர்ச்சி விகிதத்தை மீண்டும் அதிகரிப்பதற்கான பிரதமர் மோடியின் நம்பிக்கையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பது கேள்வியாக உள்ளது.
READ | அரசாங்கத்தின் ₹.50,000 கோடி புதிய திட்டத்தின் மூலம் 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு...
இந்த நம்பிக்கை ஆதாரமற்ற நம்பிக்கை அல்ல. நாட்டில் போதுமான வளங்களும் மனித வளங்களும், அதாவது தொழிலாளர்களும் உள்ளன. இதன் மூலம் மந்தமான பொருளாதாரத்தின் சக்கரம் புத்துயிர் பெற முடியும். கொரோனா உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை எவ்வாறு உடைத்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை மீண்டும் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்....
கொரோனா தாக்கத்தால்...
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% சரிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1930 ஆம் ஆண்டின் பெரும் மந்தநிலைக்குப் பிறகு மிக மோசமான காலம் இப்போது வரும் என்று ஐ.எம்.எஃப், அதாவது சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது..
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 688 லட்சம் கோடி இழப்பு ஏற்படக்கூடும். லாக்டௌனின் போது இந்தியாவிலும் சூழல் வேகமாக மாறிவிட்டது. அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதைக் காட்டுகின்றன.
READ | LPG மானியம் வங்கிக் கணக்கில் ஏரியுள்ளதா என்பதை மொபைல் மூலம் அறியலாம்...
மார்ச் வரையிலான மூன்று மாதங்களுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு முந்தைய ஆண்டின் 5.7 சதவீதமாக இருந்தது. அது இப்போது 3.1 சதவீதமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஏப்ரல் 2019 காலாண்டில் 8.2 சதவீதமாக இருந்தது, ஆனால் 2019 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 6.2 சதவீதமாகக் குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் வெறும் 5 சதவீதமாக இருந்தது. 2016-17 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது, இது 2019-20ல் சுமார் 3 சதவீதம் வரை குறைந்தது.
இப்போது கேள்வி என்னவென்றால், இந்தியா சிறப்பாக செயல்படத் தயாராக இருக்கும் துறைகள் யாவை? இது மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளில், இந்த துறைகளில் இந்தியா தனது சிறப்பிடத்தை உலகில் பெற்றுள்ளதா? உற்பத்தியுடன் தொடர்புடைய துறைகளான இவற்றின் மூலம், இனி இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கக் கூடும்....
எலக்ட்ரானிக்ஸ் அதாவது மின்னணுவியல், ஃபர்னிசர், தோல் சார்ந்த பொருட்கள், காலணிகள், ஏர்கண்டிஷனர்கள் அதாவது குளிர் சாதனப் பெட்டிகள் ஆகியவை இந்தியாவின் அடையாளமாக இருக்கின்றன.
READ | கோவித் -19 நோயாளிகளுக்கு புதிய செயலியை அறிமுகப்படுதிய கெஜ்ரிவால்..
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பல துறைகளில் தனது பிடியை வலுப்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. எலக்ட்ரானிக்ஸ் துறையில் உற்பத்தி மேலோங்கியது மட்டுமல்லாமல், உலக சந்தையின் தேவை மற்றும் தரத்தின்படி, மின்னணு பொருட்களின் உற்பத்தியும் நாட்டில் அதிகரித்துள்ளது.
எலெக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தித் தரவுகள்....
2014 - 1, 90,366 கோடி
2018-19 - 4,58,006 கோடி
சர்வதேச சந்தையில் உலகளாவிய பங்கு - 2012 - 1.3% ஆக இருந்தது
இது 2018 இல் 3% ஆக அதிகரித்தது
சிறப்பு என்னவென்றால், நாட்டில் மின்னணு பொருட்களின் உற்பத்தி இறக்குமதியை விட அதிகமாக உள்ளது. உலகில் மொபைல் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
2014 ல் நாட்டில் இரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. 2019 ல் நாட்டில் 200 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இந்தக் கொரோனா காலத்தில், கடைசி மூன்று மாதங்களில் இந்தியா தன்னை நிரூபித்துள்ளது. எந்த வாய்ப்பையும் நாம் நழுவ விடவில்லை. 65 ஆயிரம் பிபிஇ கிட்களை வெளியில் இருந்து இறக்குமதி செய்த பின்னர் சுயசார்புடைய இந்தியா எவ்வாறு முன்னேறியது என்பதை இந்த உலகம் கண்டது. இன்று, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பிபிஇ கிட் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் 3 லட்சம் கிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன..
READ | கொரோனாவால் இந்தியா இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்: மோடி!
இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதற்கு காரணம், இந்தியாவிடம் இருக்கும் தொழிலாளர் சக்தி. இது சீனாவை விட எந்த விதத்திலும் குறைவானதல்ல. சீனாவை விட இந்தியாவை ஒரு விஷயம் சிறந்ததாக்குகிறது. அது நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்களின் சதவீதமாகும். கொரோனாவால் சீனாவின் பிம்பம் களங்கக்கப்படதையடுத்து, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை ஒரு சிறந்த மாற்றாகக் காண்பதற்கு இதுவே காரணமாகும்.
பி.எம்.ஓ, நிதி ஆயோக் மற்றும் கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஆகியவை சீனாவில் இருக்கும் உற்பத்தியாளர்கள் தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு மாற்றினால், அவர்களுக்கு சலுகைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளன. மேலும், அரசாங்கம் 100 நிறுவனங்களை அணுகியுள்ளது, மாநிலங்களும் இந்த செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி சொல்லும் விஷயத்தின் அடிப்படை உண்மையில் ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. தற்சார்பிற்கான நோக்கம், அனைவரின் பங்கேற்பு அதாவது உள்ளடக்கம், முதலீடு, சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் புதுமையான முன்முயற்சியுடன் முன்னேற்றம்.
READ | ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க விருப்பமா? இதோ ஒரு பொன்னான வாய்ப்பு...
இந்த ஐந்து அம்சங்களைக் கொண்டு தன்னிறைவு பெற்ற இந்தியா, தற்சார்பு என்ற கோட்பாட்டுடன், உலகில் உள்ள இந்த வரலாறு காணாத மந்தநிலையிலிருந்து தன்னைத்தானே மீட்டெடுக்க முடியும். இதன் மூலம் எதிர்காலத்தில் வேலையின்மை என்ற அபாயகரமான சூழ்நிலையையும் நாம் தடுக்கலாம்.
கொரோனா என்ற இந்த தடையையும் ஒரு வாய்ப்பாக மாற்றி, இந்தியா, உலகிற்கு மீண்டெழுதலின் ஒரு முன்னோடியாகத் திகழும் என்று கூறினால் அது மிகையாகாது.
- மொழியாக்கம்: ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.