பாஸ்போர்ட்டில் இந்தி மொழியும் இடம்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
1967-ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் சட்டம் வடிவமைக்கப்பட்டதன் 50-வது ஆண்டு விழாவில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்துக் கொண்டார்.
அப்பொழுது அவர் பேசியதாவது:-
> 8 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் வழங்கப்படும் பாஸ்போர்ட் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும்.
> 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும்.
> பாஸ்போர்ட்டில் ஆங்கில மொழியுடன் இந்தி மொழியும் இடம் பெரும் என தெரிவித்தார்.