இந்திய சீன எல்லையை கண்காணிக்க வந்துள்ளது அதி நவீன Bharat drone...!!!

பாரத் ட்ரோன்களை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின், சண்டிகர் ஆராய்ச்சி கூடம் வடிவமைத்துள்ளது. 

Last Updated : Jul 21, 2020, 05:58 PM IST
  • பாரத் ட்ரோன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வடிவமைக்கப்பட்டது.
    இந்த ட்ரோன் எதிரிகளையும் நண்பர்களையும் அடையாளம் காணும் வல்லமை பெற்றது.
    கடுமையான காலநிலைகள் மற்றும் பருவ நிலைகளிலும் சிறப்பாக் செயல்படும்
இந்திய சீன எல்லையை கண்காணிக்க வந்துள்ளது அதி நவீன Bharat drone...!!! title=

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதற்றம் முழுமையாக தீரவில்லை. அதனால், எல்லைகளை வலுவாக கண்காணிக்கும் நடைமுறை மிகவும் அவசியமானதாகிறது.

இதை மனதில் வைத்துக் கொண்டு, கிழக்கு லடாக்கில் Line of Actual Control பகுதியில், உயர்ந்த மலை பிரதேசங்களின், உன்னிப்பாக கண்காணிக்க, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாரத் என்ற ட்ரோனை  இந்திய ராணுவத்திடம், DRDO வழங்கியுள்ளது. 

பாரத் ட்ரோன்களை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின், சண்டிகர் ஆராய்ச்சி கூடம் வடிவமைத்துள்ளது. 
இதனை உலகில் மிகச்சிறந்த, மிகவும் எடை குறைவான் ட்ரோன்களில் பட்டியலில் சேர்க்கலாம் என DRDO வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதை எந்த விதமான இடத்தையும் கண்காணிக்க பயன்படுத்தலாம் எனவும் இது மிக துல்லியமாக தகவல் தரக்கூடியது எனவும் DRDO கூறியது.
ALSO READ | விமானத்தை பயன்படுத்திய முதல் மனிதன் இலங்கை வேந்தன் ராவணன்: இலங்கை அரசு

இதில் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் சாதனம் உள்ளதால், எதிரியையும், நண்பரையும் அடையாளம் கண்டறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்கும். 

மிக கடினமான பருவ நிலைகள் கால நிலைகள் என அனைத்து நிலையிலும் சிறப்பாக செயல்படக்கூடியது இந்த பாரத் ட்ரோன் (Bharat drones).
இதில் மேம்பட்ட வகையில் இரவிலும் கண்காணிக்கும் திறன் பெற்றதால்,  இருட்டில், அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒளிந்திருக்கும் எதிரியையும் எளிதாக கண்டறியும்.
 திரளாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையிலும் இது சிறப்பாக செயல்பட முடியும் என்பதால், இதை மிகவும் பிரபலமாக உள்ளது.
இதனை ரேடாரால் கண்டுபிடிக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் சிறப்பம்சமாகும். 

ALSO READ | COVID-19 எதிரொலி: பொது போக்குவரத்து கட்டணம் 25% அதிகரிப்பு..!

சீனாவிடனான பதற்ற நிலை முழுமையாக தணியாத நிலையில், LAC பகுதியில் சீனா துருப்புகளை முழுமையாக பின்வாங்க செய்வது ஒரு சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், ரியல்-டைம் வீடியோ ட்ரான்மிஷன் வசதி கொண்ட இந்த ட்ரோன், மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News