புதுடில்லி: இந்தியா புதன்கிழமை வெற்றிகரமாக பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை (BrahMos Supersonic Cruise Missile) சோதனை செய்தது. சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை 400 கி.மீ தூரத்திற்கு மேல் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. இன்றைய வெற்றிகரமான சோதனையில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் குழுவை வாழ்த்தி, DRDO தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி, "இது சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையில் அதிக உள்நாட்டு உள்ளடக்கத்தை சேர்க்க வழிவகுக்கும்" என்று கூறினார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பி.ஜே.-10 திட்டத்தின் கீழ் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் கீழ் ஏவுகணை உள்நாட்டு பூஸ்டருடன் ஏவப்பட்டது.
ALSO READ: 11 லட்சம் கிலோ மீட்டர் சுற்றி ஓய்ந்த INS VIRAAT..!!!
இந்த ஏவுகணை ஒடிசாவில் (Odisha) உள்ள நில அடிப்படையிலான மையத்திலிருந்து ஏவப்பட்டது. இது ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட வீச்சு பதிப்பின் இரண்டாவது சோதனையாகும். இது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏர்ஃப்ரேம் மற்றும் பூஸ்டரைக் கொண்டுள்ளது.
பிரம்மோஸ் (BrahMos) ஒரு ராம்ஜெட் சூப்பர்சானில் க்ரூஸ் ஏவுகணையாகும். இது நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் நிலத்திலிருந்து ஏவப்படலாம். இந்த ஏவுகணை DRDO மற்றும் ரஷ்யாவின் பெடரல் ஸ்டேட் யூனிட்டரி எண்டர்பிரைஸ் என்.பி.ஓ மஷினோஸ்ட்ரோயினியா (NPOM) ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
சேவையில் உள்ள முதல் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை பிரம்மோஸ் ஆகும். இந்திய கடற்படையில் பிரம்மோஸ் ஆயுத காம்பிளக்சின் முதல் பதிப்பு 2005 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது. இந்த முறையின் முதல் கப்பலாக INS ராஜ்புத் (INS Rajput) இருந்தது.
எதிர்காலத்தில் கட்டப்படும் அனைத்து கப்பல்களும், நடுப்பகுதியில் மேம்படுத்தலுக்கு வரும் கப்பல்களும் ஏவுகணையுடன் பொருத்தப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய ராணுவம் (Indian Army) பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையின் மூன்று படைப்பிரிவுகளையும் சேர்த்துள்ளது.
ALSO READ: ₹2,290 கோடி மதிப்பிலான இராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR