இந்தியாவின் சாதனை; ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி; பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவில், ஜனவரி மாதத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் செலுத்தப்பட்ட அதிகபட்ச தடுப்பூசி எண்ணிக்கை இதுவாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 28, 2021, 06:38 AM IST
இந்தியாவின் சாதனை; ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி; பிரதமர் மோடி பாராட்டு title=

கொரோனாவிற்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி  உள்ள நிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய தடுப்பூசி  போடும் பணி, தற்போது மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட் (Covishield) மற்றும் கோவாக்சின் (Covaxin) ஆகிய இரண்டு தடுப்பூசிகள் முக்கியமாக  பயன்படுத்தப்படும் நிலையில், இந்தியாவில் நேற்று, அதாவது ஆக்ஸ்ட் 27ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இதுவரை 62 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில், ஜனவரி மாதத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் செலுத்தப்பட்ட அதிகபட்ச தடுப்பூசி எண்ணிக்கை இதுவாகும். ஆரம்ப கட்டத்தில், தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டினாலும், இப்போது, மிக ஆர்வமாக அதனை போட்டு வருகின்றனர்.

இந்தியாவின் இந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி (PM Marendra Modi) பாராட்டியுள்ளார். இது குறித்த தனது டிவிட்டர் பதிவில், ' இன்றைய தடுப்பூசி எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது இந்தியாவின் மகத்தான சாதனை. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், தடுப்பூசி போடும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டு வருபவர்களுக்கு எனது பாராட்டுக்கள்' என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த சாதனயை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் ஆகியோரும் பாராட்டியுள்ளனர். 

Also Read | Covaxin - Covishield கலந்து கொடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ICMR

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது ட்விட்டர் நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் தடுப்பூசி போடும் வரை நாம் ஓய்வெடுக்க முடியாது என்று கூறினார். "நாங்கள் தடுப்பூசி போடும் பணியில் முன்னேறி வருகிறோம், ஆனால், இதனுடன் திருப்தி அடையாமல்,  நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்பதை உணர்ந்து தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி போடப்படும் வரை தீவிரமாக பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க தொடர்ந்து பங்களிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன், ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 60,07,654 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 23,36,159 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மேலும், இன்று வரை முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47,91,48,993. இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 14,17,94,587 என்ற அளவில் உள்ளது.

Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News