உலகின் பழமையான தமிழ் மொழியின் ரசிகன் நான்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம்  மாதம் தோறும் மக்களிடையே உரையாடி வருகிறார். மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 27, 2021, 01:47 PM IST
  • பிரதமர் மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம் தோறும் மக்களிடையே உரையாடி வருகிறார்.
  • தமிழ் கலாச்சாரத்தின் அபிமானியான எனக்கு தமிழ் மொழி மீதான பற்று என்றுமே குறையாது.
  • தமிழ் மொழியை நினைத்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
உலகின் பழமையான தமிழ் மொழியின் ரசிகன் நான்: பிரதமர் மோடி  title=

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம்  மாதம் தோறும் மக்களிடையே உரையாடி வருகிறார். மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது

இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்னும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி (PM Narendra Modi) நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்: 

-  உலகத்திலேயே பழமையான மொழியாம் தமிழ் மொழியின் ரசிகன். தமிழ் கலாச்சாரத்தின் அபிமானியான எனக்கு தமிழ் மொழி மீதான பற்று என்றுமே குறையாது. தமிழ் மொழியை நினைத்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.  

- பஞ்சாப் சீக்கிய குரு கோவிந்த் அவர்கள் தமிழ் மொழி குறித்து பெருமையாக எடுத்துரைத்துள்ளார். திருக்குறளும் புகழ்பெற்றது.

- அனைத்து இந்தியர்களும் COVID-19  தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

- COVID-19 தடுப்பூசி  குறித்த வதந்திகளை நம்பாமல், தயக்கத்தை விடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

- எனது 100 வயதான தாய்க்கு 2 டோஸ்கள் COVID-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன.

- தடுப்பூசியைத் தவிர்ப்பது உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது

- இதுவரை, இந்தியா முழுவதும் 31 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது," 

ALSO READ | நாட்டில் தடுப்பூசி போடப்படும் வேகம் மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி

- 26 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது.  5.49 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளது.

- ஜூன் 21 அன்று, இந்தியாவின் மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை நடைமுறைக்கு வந்தபோது ஒரே நாளில், நாடு முழுவதும் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

ALSO READ: Delta Plus Variant அறிகுறிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சை: முழு விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News