Cat Que Virus: இதுதான் queue-வில் இருக்கும் அடுத்த வைரசாம்: ICMR Warning!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானிகள் மற்றொரு சீன வைரசான Cat Que Virus குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 29, 2020, 02:44 PM IST
  • சீனாவும் வியட்நாமும் க்யூலக்ஸ் கொசுக்கள் மற்றும் பன்றிகளில் கேட் கியூ வைரஸ் இருப்பதைப் பற்றி கூறியுள்ளன.
  • உள்நாட்டு பன்றிகளின் உடல்களில் CQV வைரஸ் நன்றாக வளரும்.
  • வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் சீனாவில் உள்நாட்டில் வளர்க்கப்படும் பன்றிகளில் இருக்கின்றன – ஆய்வு.
Cat Que Virus: இதுதான் queue-வில் இருக்கும் அடுத்த வைரசாம்: ICMR Warning!! title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பல மாதங்களாக உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் பிடியிலிருந்தே இன்னும் உலகம் மீண்டபாடில்லை. இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) விஞ்ஞானிகள் மற்றொரு சீன வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது 'கேட் கியூ வைரஸ்' (Cat Que Virus) அதாவது CQV என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் தொற்றுநோயை பரப்பும் வல்லமை படைத்தது என்று ஐ.ஏ.என்.எஸ் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, CQV மனிதர்களில் காய்ச்சல், மூளைக்காய்ச்சல் மற்றும் குழந்தைளில் என்செபாலிடிஸ் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.

புனேவில் உள்ள ICMR-ன் தேசிய வைராலஜி நிறுவனத்தின் ஏழு ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டிய அந்த அறிக்கை, சீனாவும் (China) வியட்நாமும் (Vietnam) க்யூலக்ஸ் கொசுக்கள் (Culex mosquitoes) மற்றும் பன்றிகளில் கேட் கியூ வைரஸ் இருப்பதைப் பற்றி கூறியுள்ளன என தெரிவித்துள்ளது. இந்தியாவில் குலெக்ஸ் கொசுக்களின் ஒத்த இனங்கள் பரவுவதால் இந்த வைரஸின் பிரதி இயக்கவியலைப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்தினர்.

உள்நாட்டு பன்றிகளின் உடல்களில் CQV நன்றாக வளரும் என்றும், இந்த வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் சீனாவில் உள்நாட்டில் வளர்க்கப்படும் பன்றிகளில் இருப்பதாகவும் உச்ச ஆராய்ச்சி அமைப்பு வெளிப்படுத்தியது. உள்ளூர் பகுதிகளில் CQV ஒரு இயற்கை சுழற்சியை உருவாக்கியுள்ளது என்பதை இது குறிக்கிறது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

ALSO READ: COVID-19 சிகிச்சைக்கு ஆயுர்வேதம் சிறப்பாக செயல்படுகிறது: ஆய்வு!

விஞ்ஞானிகள் இந்த வைரஸிற்கான ஆன்டிபாடிகளை மாநிலங்களில் சோதனை செய்யப்பட்ட 883 மனித சீரம் மாதிரிகளில் இரண்டில் கண்டுபிடித்தனர். இந்த இரண்டு நபர்களும் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இது குறிக்கிறது.

"இந்த வைரஸின் பரவலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு செயலூக்கமான நடவடிக்கையாக இந்த மதிப்பீடுகளைப் பயன்படுத்தி அதிகமான மனித மற்றும் பன்றி சீரம் மாதிரிகளை ஆய்வு செய்வது அவசியம்” என்று ஜூன் மாதத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறப்பட்டது.

சீனாவில் குலெக்ஸ் கொசுக்கள் மற்றும் வியட்நாமில் பன்றிகள் இருப்பது ஆசிய நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

COVID-19 தொற்றுநோய்க்கு இன்னும் ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமல், சோதனை அளவிலேயே அனைத்தும் இருக்கும் நேரத்தில் மற்றொரு சீன வைரஸ் பற்றிய இந்த பகீர் தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ALSO READ: COVID பரிசோதனை முடிவு Positive-வாக வந்தால் என்ன செய்ய வேண்டும்? தெரிந்துகொள்ளுங்கள்…

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News