புதுடெல்லி: இரு தினங்களுக்கு முன்னதாக தமிழ்நாட்டின் நீலகிரி மலைப் பகுதியில் நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க IAF முப்படை விசாரணை நீதிமன்றத்தை அமைத்துள்ளது. ஆனால், விபத்து தொடர்பான பல ஊகங்கள் உலா வருகின்றன. இது இறந்தவரின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கும். எனவே தேவையில்லாத ஊகங்களைத் தவிர்க்கலாம் என்று இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் டிசம்பர் எட்டாம் தேதியன்று நீலகிரி மலையில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் 11 பேர் இந்த விபத்தில் பலியாகினார்கள்.
2021 டிசம்பர் 08ம் தேதியன்று நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க IAF முப்படை விசாரணை நீதிமன்றத்தை அமைத்துள்ளது. விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். அதுவரை, இறந்தவரின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தகவல் இல்லாத ஊகங்களைத் தவிர்க்கலாம் என்று சமூக ஊடகப் பதிவில் விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.
IAF has constituted a tri-service Court of Inquiry to investigate the cause of the tragic helicopter accident on 08 Dec 21. The inquiry would be completed expeditiously & facts brought out. Till then, to respect the dignity of the deceased, uninformed speculation may be avoided.
— Indian Air Force (@IAF_MCC) December 10, 2021
ஹெலிகாப்டர் எலக்ட்ரானிக்ஸ் ஹேக் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, விமானிக்கு தவறாக வழிநடத்தும் தரவை அனுப்புவது/அல்லது அமைப்பின் செயல்பாட்டை சமரசம் செய்வது சாத்தியமா என்பது போன்ற ஊகங்களை பலரும் விவாதித்து வருகின்றனர்.
ALSO READ | இந்தியாவின் மிகப்பெரிய சோகத்திற்கு இந்திய ராணுவத்தை கேலி செய்யும் சீனா
நமது நாட்டின் ஓய்வுபெற்ற கர்னல் ஒருவர், இந்திய ராணுவ ஜெனரலின் மரணத்தைக் (CDS General Bipin Rawat Death) கொண்டாடுகிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான கண்டனங்களை அடுத்து, அவர் இந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.
இதேபோல், இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற விங் கமாண்டர் அனுமா ஆச்சார்யா தனது ட்வீட் ஒன்றில், ரோல் ஓவர், கேம் ஓவர், ஜெய் ஹிந்த் என்று எழுதினார். இந்த நாட்டின் ஜெனரலின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற விங் கமாண்டர் ஒருவர் இப்படி சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது பலராலும் கண்டிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தும் பாகிஸ்தானை கேலி செய்கிறோம். ஆனால் உண்மை என்னவெனில், நமது விமானப்படையின் நம்பகத்தன்மையை நாம் இழந்துவிட்டோம், பாகிஸ்தான் மற்றும் சீன விமானங்கள் நம்மிடம் இருப்பதை விட சிறந்தவை என்பதுபோன்ற, ஆதாரமில்லாத பொத்தம்பொதுவான கருத்துக்களை சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
ALSO READ | இறுதிப் பயணத்திற்கு தயாராகிறார் இரும்பு மனிதர் பிபின் ராவத்!!
வேறு சிலரோ, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பல விமானங்களும் விபத்துக்களை சந்தித்துள்ளன. ஆனால், அந்த நாடுகள், நமது பாதுகாப்புப் படைகளைப் போல வெளிப்படையானவையோ அல்லது பொறுப்புக்கூறக்கூடியவையோ அல்ல என்பதால் விஷயம் வெளியே தெரிவதில்லை என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற ஊகங்களுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய விமானப்படை சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது, , முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் இறுதிச் சடங்குகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
READ ALSO | பிபின் ராவத்தின் பதவி யாருக்கு? முப்படைகளின் புதிய தலைமைத் தளபதி யார்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR