உத்திரப்பிரதேசத்திலுள்ள வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் திருத்தலமாகும்.
வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டதால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோவில் என அழைக்கப்படுகின்றது. விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.
காசியில் பிரமாண்டமான சிவன் கோவில் இடைக்காலத்தில் இடிக்கப்பட்டு இங்கு மசூதியாக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஞானவபி மசூதி தொடர்பாக வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் ஞானவாபி மசூதியின் பழமையான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
1. அவிமுக்தேஷ்வர் சிவலிங்கம் காசியில் உள்ள ஒரு பெரிய கோவிலில் ஆதிலிங்க வடிவில் நிறுவப்பட்டுள்ளது என இந்து புராணங்கள் கூறுகின்றன.
2. கிமு 11 ஆம் நூற்றாண்டில் மன்னர் ஹரிச்சந்திரரால் புதுப்பிக்கப்பட்ட விஸ்வநாதர் கோயில், பேரரசர் விக்ரமாதித்யனால் அவரது ஆட்சிக் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.
3. 1194: இந்த பிரமாண்ட கோவில் பின்னர் முஹம்மது கோரியால் கொள்ளையடிக்கப்பட்டு இடிக்கப்பட்டது.
4. 1447 : கோயில் உள்ளூர் மக்களால் புனரமைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஜான்பூரின் சுல்தான் மஹ்மூத் ஷாவால் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டது. இருப்பினும், இது பற்றி வரலாற்று ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
மேலும் படிக்க | ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்ட விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
5. 1585: ராஜா தோடர்மாலின் உதவியுடன் பண்டிட் நாராயண் பட் என்பவரால் இந்த இடத்தில் மீண்டும் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது.
6. 1632: காசி விஸ்வநாதர் கோயிலை இடிக்க ஷாஜஹான் கட்டளையிட்ட நிலையில், இராணுவம் அனுப்பப்பட்டது. இந்துக்களின் பலத்த எதிர்ப்பால் விஸ்வநாதர் கோயிலின் மைய பகுதியை இராணுவத்தால் அழிக்க முடியவில்லை. ஆனால் காசியின் மற்ற 63 கோயில்கள் இடிக்கப்பட்டன.
7. 1669: 18 ஏப்ரல் 1669 அன்று, காசி விஸ்வநாதர் கோவிலை அழிக்க அவுரங்கசீப் உத்தரவிட்டார். இந்த ஆணை இன்றும் கொல்கத்தாவில் உள்ள ஆசிய நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. எல்.பி.சர்மாவின் 'இடைக்கால இந்தியா' என்ற புத்தகத்தில் இந்த உத்தரவு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. சாகி முஸ்தய்த் கான் எழுதிய 'மசிதே ஆலம்கிரி' என்னும் நூலிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
8. 1669: 1669 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 அன்று, கோவிலை இடிக்கும் பணி நிறைவேற்றப்பட்டு ஔரங்கசீப்பிற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. பின்னர் ஞானவாபி வளாகத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டது.
9. 1735: கோயில் இடிக்கப்பட்ட பிறகு 125 ஆண்டுகள் காசி விஸ்வநாதர் கோயில் இல்லை. இதற்குப் பிறகு, 1735 ஆம் ஆண்டில், இந்தூரின் மகாராணி தேவி அஹில்யாபாய் ஞானவாபி வளாகத்திற்கு அருகில் காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டினார்.
10. 1809: ஞானவாபி மசூதியை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்து சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்த போது, ஞானவாபி மசூதி விவகாரம் முதல் முறையாக சூடுபிடித்தது.
11. 1810: 1810, டிசம்பர் 30ம் தேதி அன்று, அப்போதைய பனாரஸ் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருந்த திரு. வாட்சன், ஞானவாபி வளாகத்தை நிரந்திரமாக இந்துக்களிடம் ஒப்படைக்குமாறு 'சபையின் துணைத் தலைவருக்கு' கடிதம் எழுதினார். ஆனால் இது நடைபெறவில்லை
12. 1829-30: குவாலியரின் மகாராணி பைஜாபாய் இந்த கோவிலில் ஞானவாபியின் பந்தலைக் கட்டினார். நேபாள மகாராஜா அங்கு ஒரு பெரிய நந்தி சிலையை நிறுவினார்.
13. 1883-84: ஞானவாபி மசூதியின் முதல் குறிப்பு ஜமா மஸ்ஜித் ஞானவாபி என வருவாய் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
14. 1936: 1936 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீதான 1937 ஆம் ஆண்டு தீர்ப்பில் ஞானவாபி மசூதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
15. 1984: விஸ்வ ஹிந்து பரிஷத் சில தேசியவாத அமைப்புகளுடன் இணைந்து ஞானவாபி மசூதி இடத்தில் கோவில் கட்டும் நோக்கத்துடன் நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கியது.
16. 1991: ஹரிஹர் பாண்டே, சோம்நாத் வியாஸ் மற்றும் பேராசிரியர் ராம்ரங் ஷர்மா ஆகியோர் இந்து தரப்பு சார்பில் மசூதி மற்றும் முழு வளாகத்தையும் ஆய்வு செய்து வழிபட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
17. 1991: மசூதி ஆய்வுக்காக மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, வழிபாட்டு இடங்களுக்கான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றியது. 1947 ஆகஸ்டு 15ம் தேதிக்கு முன் நடைமுறைக்கு வந்த எந்த மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தையும் வேறு மதத்துக்கு மாற்ற முடியாது என்று உத்தரவிட்டது.
18. 1993: மசூதி ஆய்வுக்காக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்து தற்போதைய நிலையைத் தொடர உத்தரவிட்டது.
19. 1998: மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதித்த நிலையில், மசூதி நிர்வாகக் குழு இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஆய்வுக்கான அனுமதியை நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும் படிக்க | #AyodhyaKeBaadKashi: மோட்சத்திற்கு வழிகாட்டும் நகரில் 'சிவனுக்கே அநீதியா?'
20. 2018: . 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது. ஆனால் முஸ்லீம் தரப்பு மீண்டும், தடை உத்தரவு பெற்றது.
21. 2019 : இந்த வழக்கின் விசாரணை வாரணாசி நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது.
22. 2021: ஏப்ரல் மாதம் 5ம் தேதி ஞானவபி வளாகத்தில் அமைந்துள்ள சிருங்கர் கவுரி கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரியும், ஆய்வு நடத்தக் கோரியும் சில பெண்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஞானவாபி மசூதியின் தொல்பொருள் ஆய்வுக்கு விரைவு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
23. 2022: நீதிமன்ற உத்தரவின்படி, ஞானவாபி மசூதியின் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்தன. உச்ச நீதிமன்றம் சிவலிங்கம் இருந்ததாக கூறப்படும் பகுதியை சீல் செய்ய உத்தரவிட்டனர். அதே சமயம் இஸ்லாமியர்கள் மற்ற இடங்களில் தொடர்ந்து வழிபாடு நடத்தலாம் என்று கூறினர்.
24. ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும், வாரணாசி நீதிமன்றமும் இரண்டு வெவ்வேறு விசாரணைகளை நடத்துகிறது. ஞானவாபி மசூதி லிங்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. எனவே வாரணாசி நீதிமன்றம் இடையில் எந்த உத்தரவு போட கூடாது என்று இஸ்லாமிய தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் வாரணாசி நீதிமன்றத்தில் நடக்க இருந்த இன்னொரு விசாரணையையும் வைத்து, இதில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது எனக் கூறியுள்ளது.
மேலும் படிக்க | காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்... வழக்கு விபரங்கள்..!!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR