கர்நாடகாவில் 5 ஆண்டுகளுக்கு எங்களது கூட்டணி ஆட்சியே நீடிக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை' என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்...
கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராக உள்ளார். இந்நிலையில் கூட்டணி கட்சியில் உள்ள 18 எம்.எல்.ஏக்கள் வேறு கட்சிக்கு மாற இருப்பதாக சில தகவல்கள் வெளியாகின. மேலும் காங்கிரஸ் - ம.ஜ.த இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த அவரை, சார் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி இதுகுறித்து பேசுகையில், "எங்களது கூட்டணியை கட்சி எம்.எல்.ஏக்கள் வேறு கட்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல. காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் தலைமையிலான இந்த கூட்டணி ஆட்சி ஐந்தாண்டுகள் நீடிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை" என தெரிவித்தார்.
In Karnataka, our government is very stable. It will run for 5 years. That is all rumour (18 Congress & JD(S) MLAs joining BJP). BJP is trying to destabilise the government: Karnataka Chief Minister HD Kumaraswamy pic.twitter.com/AVqVYol4hC
— ANI (@ANI) September 27, 2018