ஜம்மு காஷ்மீரின் பந்திப்போராவில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.....
இன்று காலை ஜம்மு காஷ்மீர் பந்திப்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் போலீசார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகிய படை வீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். சில மணி நேர சண்டைக்கு பிறகு 1 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பதுங்கியுள்ள மேலும் 2 பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் தொடர் துப்பாக்கிச்சண்டை.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
#UPDATE Hajin encounter: One terrorist has been killed, operation continues #JammuAndKashmir pic.twitter.com/qiWAz1fqKh
— ANI (@ANI) August 30, 2018
முன்னதாக, மேற்று காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த தாக்குதலில் போலீசார் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த அம்பவம் குறிப்பிடத்தக்கது...!