புதுடெல்லி: டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்திற்குப் பிறகு, பல உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என மத்திய அரசாங்கம் அறிவித்தது. அதே நேரத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவது குறித்து கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை எனத்தகவல்.
நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 45வது ஜிஎஸ்டி கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் மருந்துகளுக்கு ஏற்கனவே வரி தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தது. அதை மேலும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில குறிப்பிட்ட உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
Transport of export goods by vessels&air is exempt from GST till 30 Sept. This exemption was given because of difficulties being faced by exporters in getting a refund of ITC(Input Tax Credit)due to technical issues on GST portal. This exemption is being extended by 1 more yr: FM pic.twitter.com/AYR46hvQpy
— ANI (@ANI) September 17, 2021
Amphotericin B, Tocilizumab ஆகிய இரண்டு மருந்துகளுக்கு வரும் டிசம்பர் 31 வரை வரி கிடையாது. மேலும் Muscular atrophy என்னும் நோய்க்கான மருந்தான Zolgensma மற்றும் Viltepso மருந்துகளுக்கு முழுமையாக ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.இந்த மருந்தின் விலை 16 கோடி ரூபாயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவது குறித்து விவாதிக்க இது தற்போது சரியான காலம் இல்லை என ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் கூறியதால், தற்போதைக்கு பெட்ரோலியம் பொருட்கள் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டுவர முடியாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR