கொரோனாவால் மணமகன் மரணம்...திருமணத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா

பீகார் தலைநகர் பாட்னாவில் திருமணமான இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மணமகன் மரணமடைந்தார்.

Last Updated : Jul 1, 2020, 11:53 AM IST
கொரோனாவால் மணமகன் மரணம்...திருமணத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா title=

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் திருமணமான இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ்  (Coronavirus) தொற்று காரணமாக மணமகன் மரணமடைந்தார். அறிக்கையின்படி, தம்பதியரின் திருமணத்தில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கொரோனா வைரஸ் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 15 ஆம் தேதி பாட்னாவின் பாலிகஞ்சில் உள்ள தீபாலி கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. 30 வயதான மணமகன் ஹரியானாவின் குருகிராமில் மென்பொருள் பொறியாளராக இருந்தார். அவர் தனது திருமணத்திற்காக தனது கிராமத்திற்கு வந்திருந்தார். மணமகன் திருமணத்தின் போது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், கோவிட் -19 அறிகுறிகளைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

READ | கொரோனா எதிரொலி: வீடியோ காலில் நடந்த திருமணம்... அப்போ... முதலிரவு?..

 

திருமணமான இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, அவர் உயிரிழந்தார். 

மணமகனின் மரணம் குறித்து பாட்னாவில் உள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்ட பின்னர், தம்பதியரின் நெருங்கிய உறவினர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. இதில் ஜூன் 15 அன்று திருமண கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட 15 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சந்தேகத்தின் பேரின் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் சோதனை செய்தது. சோதனை முடிவில் மேலும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

 

READ | ஆடுகளுக்கு பரவும் கொரோனா.... கர்நாடகாவில் தனிமை படுத்தபட்ட 50 ஆடுகள்..!

 

அறிக்கைகள் மற்றும் ஆரம்ப விசாரணைகளை சேகரித்த பின்னர், பாட்னா மாவட்ட நிர்வாகம் குடும்பத்தின் அலட்சியம் மற்றும் கொரோனா வைரஸ் COVID-19 வழிகாட்டுதல்களை மீறுயதே மணமகனின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று கூறினார்.

Trending News