அமராவதி: ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் (Visakhapatnam) நிர்வாக தலைநகரமாகவும், அமராவதி (Amaravati) சட்டமன்ற தலைநகரமாகவும் மற்றும் கர்னூல் (Kurnool) நீதித்துறை தலைநகரம் என மூன்று தலைநகரங்களை உருவாக்குவதற்கான தடைகள் அகற்றப்பட்டுள்ளன.
ஆந்திர ஆளுநர் பிஸ்வபுஷன் ஹரிச்சந்தன் (Biswabhushan Harichandan) வெள்ளிக்கிழமை இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார். மாநிலத்திற்கான மூன்று தலைநகரங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து பிராந்தியங்களின் மசோதா, 2020 மற்றும் ஆந்திர மூலதன மேம்பாட்டு ஆணையம் (திரும்பப்பெறுதல்) மசோதா, 2020 அமராவதியை மாநில தலைநகராக உருவாக்க 2014 டிசம்பரில் உருவாக்கப்பட்ட ஐபிசிஆர்டிஏவை நீக்குதல் போன்றவற்றுக்கு ஒப்புதல் கிடைத்தது.
ALSO READ | ஜெகன் ரெட்டியின் உத்தரவு; தரைமட்டமான சந்திரபாபு நாயுடு கட்டிடம்!
இந்த இரண்டு மசோதாக்களும் (Two Controversial Bills) ஜூன் 16 அன்று மாநில சட்டமன்றத்தால் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டன, ஆனால் அவை மாநில சட்டமன்றத்தில் விவாதிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால் ஒரு மாதமகா சபை எந்த முடிவும் எடுக்காததால், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்பட்டு ஜூலை 18 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.
சட்ட வல்லுநர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்திய ஆளுநர் ஹரிச்சந்தன், இறுதியாக வெள்ளிக்கிழமை தனது ஒப்புதலை அளித்தார். இதமூலம் ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க வழி வகுத்துள்ளது.
ALSO READ | அரசியலில் அதிரடி காட்டும் ஜெகன்மோகன்!! ஆந்திராவில் 5 துணை முதலமைச்சர்கள்
"மாநில அரசிதழில் அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்களை குறித்து அரசாணை வெளியிடப்பட்டவுடன், அந்த மசோதாக்கள் நடைமுறைக்கு வரும் என்று முதலமைச்சரின் அலுவலகத்தில் ஒரு அதிகாரி கூறினார்.
தெலுங்கு தேசம் கட்சி (Telugu Desam Party) தலைநகரம் தொடர்பான புதிய மசோதாக்கள் சட்டப்பூர்வமாக செல்லாது என்று வாதிட்டு வருகின்றன. ஏனெனில் ஜனவரி மாதம் மாநில சட்டமன்றத்தில் மாநில அரசு அறிமுகப்படுத்திய இரண்டு மசோதாக்கள் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டன எனவும், ஒரே மாநிலத்தில் மூன்று மாநிலங்கள் இருந்தால், ஒவ்வொரு பிரச்சனைக்கும் வெவ்வேறு இடத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும், இது மக்களை அலைக்கழிக்கும் வேலை என தெலுங்கு தேசம் குற்றம்சாட்டி வருகிறது.
ALSO READ | குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்க்கு ரூ.15,000 வழங்கப்படும்