ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்...

ரபேல் போர் ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இன்று(பிப்.,12) CAG., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது!

Last Updated : Feb 12, 2019, 07:48 AM IST
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்... title=

ரபேல் போர் ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இன்று(பிப்.,12) CAG., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது!

ஐரோப்பிய நாடான, பிரான்ஸில் உள்ள ‘டசால்ட்’ நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். 

இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்த வந்த நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ரபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இன்று, CAG., அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய மக்களவையின், கடைசி கூட்டம், நாளை முடியவுள்ள நிலையில், இன்று, CAG.,  அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஞாயிறு அன்று., காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கபில் சிபல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரவிக்கையில்...

தற்போதைய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மெக்ரிஷி, கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி முதல் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி வரை மத்திய அரசின் நிதித்துறை செயலாளராக இருந்தார். அந்த காலகட்டத்தில் (அதாவது 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்) பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்று, ரபேல் ஒப்பந்ததை இறுதி செய்து அறிவித்தார்.

நிதித்துறை செயலாளர் என்ற முறையில், ரபேல் தொடர்பான பேச்சுவார்த்தையில் ராஜீவ் மெக்ரிசி பங்கேற்றார். எனவே, அவர் ரபேல் பேரம் குறித்து தணிக்கை செய்வது உகந்தது அல்ல. எனவே ரபேல் விமான பேரத்தை தணிக்கை செய்வதில் இருந்தும், நாடாளுமன்றத்தில் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதில் இருந்தும் ராஜீவ் மெக்ரிஷி, விலகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

எனினும் கபில் சிபிலின் இந்த கருத்தினை ஏற்க மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறுத்துவிட்டார். 

குறிப்பு: அக்டோபர் 24, 2014 முதல் ஆகஸ்ட் 30, 2015 வரை., அதாவது பிரதமர் நரேந்திர மோடி 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி பாரிசுக்கு சென்று ரபேல் ஒப்பந்தம் கையெழுத்திட்ட காலக்கட்டத்தில் சிபில் மற்றம் ராஜீவ் மெக்ரிஷி மத்திய அரசின் நிதித்துறை செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News