7th pay commission 34 சதவிகித டிஏ உயர்வுக்கு பிறகு இந்த நல்ல செய்தி வரப்போகுது

அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியுள்ள மத்திய அரசு, ஊழியர்களுக்கு HRA ஐ அதிகரிப்பதன் மூலம் மற்றொரு நல்ல செய்தியை வழங்கக்கூடும் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 18, 2022, 04:31 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
  • 34 சதவிகித டிஏ உயர்வுக்கு பிறகு நல்ல செய்தி
  • பணவீக்கத்தில் சாத்தியமாகுமா அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள்?
7th pay commission 34 சதவிகித டிஏ உயர்வுக்கு பிறகு இந்த நல்ல செய்தி வரப்போகுது title=

புதுடெல்லி7வது ஊதியக்குழு: 34% வரை டிஏ உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மற்றொரு நல்ல செய்தி வரவிருக்கிறது என்று தகவல்கள் வருகின்றன.

தற்போது அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியுள்ள மத்திய அரசு, ஊழியர்களுக்கு HRA ஐ அதிகரிப்பதன் மூலம் மற்றொரு நல்ல செய்தியை வழங்கக்கூடும் என்ற மற்றொரு ஊகம் ஊடகங்களில் பரவி வருகிறது.

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், 7வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படியை (Dearness Allowance (DA)) 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

இந்த சமீபத்திய உயர்வு மூலம், DA இப்போது அடிப்படை வருமானத்தில் 34% ஆகிவிட்டது. இந்த நடவடிக்கையால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் லாபம் அடைகின்றனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ-வைத் தொடர்ந்து பிற கொடுப்பனவுகளிலும் உயர்வு, ஊதியத்தில் பம்பர் ஏற்றம் 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவை, தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை தொழிலாளர்களுக்கான (AICPI0IW) அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 

2021 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சராசரி சில்லறை பணவீக்கம் (average retail inflation) 5.01 சதவீதமாக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் அது 6.07 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தற்போது அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA ஐ அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் மற்றொரு நல்ல செய்தியை வழங்கக்கூடும் என்ற மற்றொரு ஊகம் ஊடகங்களில் பரவி வருகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு நற்செய்தி, நிதி அமைச்சகம் அளித்த தகவல்

கடைசியாக ஜூலை 2021 இல் HRA உயர்த்தப்பட்டது. அந்த நேரத்தில், DA 25 சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் அரசாங்கம் DAவை 28 சதவீதமாக உயர்த்தியது. இப்போது அரசாங்கம் DAவை 34 சதவீதமாக உயர்த்தியுள்ளதால், HRAவும் திருத்தப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, ​​அரசாங்கம் HRA ஐ திருத்தினால், அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த சம்பளத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.

வீட்டு வாடகை அலவன்ஸ் அதிகரிக்கும் 

X, Y & Z நகரங்களுக்கு முறையே @24 சதவீதம், 16 சதவீதம் மற்றும் 8 சதவீதம் HRA செலுத்தப்படுகிறது. எச்ஆர்ஏ ரூ.5400, ரூ.3600 மற்றும் எக்ஸ், ஒய் மற்றும் இசட் நகரங்களுக்கு ரூ.1800க்கு குறைவாக இருக்கக்கூடாது.

ஆனால், டிஏ 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஏனென்றால், அரசின் பழைய உத்தரவின்படி, டிஏ 50 சதவீதத்தைத் தாண்டினால், ஹெச்ஆர்ஏ 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என்று இருக்கும்.

மேலும் படிக்க | மீண்டும் பவுலிங்கில் சொதப்பல்! சிஎஸ்கே-விற்கு எமனாக வந்த ரஷித் கான், மில்லர்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News