புது தில்லி: திங்கள்கிழமை ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இந்த அறிவுறுத்தலின் கீழ், அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள், அங்கு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக, சானிடர் நாப்கின்கள் பெறுவதற்கான இயந்திரங்களை நிறுவுவது முதல், நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உயர் தொடக்க / இடைநிலை / மேல்நிலை வகுப்புகளில், பெண்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. உண்மையில், ஜெயா தாக்கூர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தவிர, பெண் மாணவர்களுக்கான மாதவிடாய் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக நிலையான மாதிரி செயல்முறை (SOP) மற்றும் தேசிய மேலாண்மை மாதிரியை உருவாக்கவும் பள்ளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | கற்பழிப்பினால் ஏற்படும் கர்ப்பத்தை போன்ற கொடுமை வேறு எதுவும் இல்லை: கேரள நீதிமன்றம்
மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை முக்கியப் பிரச்சினையாக விவரித்த நீதிமன்றம், நாட்டின் பள்ளிகளில் மாதவிடாய் குறித்த ஒரே மாதிரியான தேசியக் கொள்கையை, உருவாக்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினையும் ஆலோசனை செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதற்குத் தேவையான தரவுகள் அனைத்தும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் சேகரிக்கப்பட வேண்டும். மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், கல்வி அமைச்சகம் மற்றும் நீர் வள அமைச்சகம் ஆகியவை மாதவிடாய் சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளன என்றும் பெஞ்ச் குறிப்பிட்டது. ஜூலை இறுதிக்குள் அரசிடம் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் நீதிமன்றம் கேட்டுள்ளது.
மேலும் படிக்க | மனைவியினால் மனரீதியாக சித்திரவதை அனுபவித்த கணவனுக்கு விடுதலை அளித்த நீதிமன்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ