உத்தரபிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் தயாசங்கர் சிங், அங்குள்ள மாவ் நகரில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியை சரமாரியாக சாடினார்.
‘‘கன்ஷிராம் கண்ட கனவுகளை மாயாவதி சுக்குநூறாக உடைத்துவிட்டார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறார். ஒரு கோடி ரூபாய்க்கு ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கிறார். யாராவது ரூ.2 கோடி தர முன் வந்தால் அவருக்கு டிக்கெட்டை வழங்குகிறார். பிறகு யாரேனும் ரூ.3 கோடி தர தயார் என்றால், அவருக்கு விற்று விடுகிறார் என்று கூறிய அவர் மாயாவதியை விலை மாதுவுடன் ஒப்பிட்டு பேசினார்.
மாயாவதி பற்றி அவர் கூறிய வார்த்தைகள் டெலிவிஷன் சானல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு பலவேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்திய அரசியல் தலைவர்கள் பலர் எத்ர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தயாசங்கர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அதனைத்தொடர்ந்து, தயா சங்கர் சிங் தனது கட்சியான பா.ஜ-விலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்டார்
உத்தரபிரதேசத்தில் தயாசங்கர் சிங்கிற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். தவறாக பேசிய பாரதீய ஜனதா தலைஅவர் தயாசங்கர் நாக்கை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ. 50 லடசம் வ்ழங்க்கப்படும் என பகுஜன் சமாஜ் கட்சியின் சண்டிகர் பிரிவு தலைவர் ஜன்னத் ஜஹான் அறிவித்து உள்ளார்.