ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்ட பகீர் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து அதானி பங்குகளின் பங்கு விலை வீழ்ச்சியடைந்த விவகாரத்தை விசாரிக்க குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொழிலதிபர் கவுதம் அதானி வரவேற்றுள்ளார். பில்லியனரான அதானி குழுமத்தின் தலைவர், மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக தெரிவித்தார்.
"மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதானி குழுமம் வரவேற்கிறது. இது காலக்கெடுவுக்குள் இறுதி முடிவைக் கொண்டுவரும். உண்மை வெல்லும்" என்று 60 வயதான அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கெளதம் அதானி ட்வீட் செய்துள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் பங்குச் சந்தைகளுக்கான பல்வேறு ஒழுங்குமுறை அம்சங்களை ஆராய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையிலான ஆறு பேர் கொண்ட கமிட்டி, இதனை விசாரிக்கும். அதானி விவகாரத்தில், பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி தொடர்பான நான்கு பொதுநல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னணியில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவில் முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே, கே.வி.காமத், நந்தன் நிலேகனி, சோமசேகரன் சுந்தரன், ஓ.பி.பட் மற்றும் ஜே.பி.தேவ்தத் ஆகியோர் அடங்குவர். இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் குழுவிற்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குமாறு மத்திய, நிதி சட்ட அமைப்புகள் மற்றும் செபி தலைவர் ஆகியோருக்கு பெஞ்ச் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு, அனைத்து 10 அதானி பங்குகளும் இன்று வர்த்தகத்தில் ஏற்றம் கண்டன. அவற்றில் நான்கு 5% கூடுதல் வளர்ச்சியைக் கண்டன அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 2% உயர்ந்துள்ளது.
ஜனவரி 25 அன்று குறுகிய விற்பனையாளர் அறிக்கை வெளியிடப்பட்டது முதல், அதானி பங்குகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதுவரை மொத்த இழப்பு ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட 4 அதானி குழும நிறுவனங்களிலும் பிளாக் ஒப்பந்தங்கள் காணப்பட்டன. ஹிண்டன்பர்க் அறிக்கை அதானியின் வெற்றியை "கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி" என்று கூறியிருந்தாலும், அதிகப்படியான அந்நியச் செலாவணி மோசமான வணிக நடைமுறையின் ஒரு வழக்கு ஆனால் அது ஒரு தீமை அல்ல என்றும் பங்கு வர்த்தக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
மேலும் படிக்க: Adani Group செய்த முதலீடுகள் பற்றிய விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு RBI உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ