Free Ration Scheme: ஏழைகளின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுவும் கொரோனா தொற்றுக் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வேலை இழந்தவர்களுக்கும், ஏழை மக்களுக்காகவும் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. யாரும் பசியுடன் தூங்கக்கூடாது என்ற திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு அரசு இலவச ரேஷன் வழங்கி வருகிறது. கொரோனாவுக்குப் பிறகு, மக்கள் பொருளாதார மட்டத்தில் பல சவால்களைக் கண்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டு வேளை ரொட்டி கூட சரியாக கிடைக்காமல் தவிக்கும் பலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்காக அரசு சார்பில் இலவச ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், இலவச ரேஷன் திட்டத்திற்கான காலக்கெடுவை அரசு நீட்டித்துள்ளது.
இலவச ரேஷன் திட்டத்திற்கான காலக்கெடுவை இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு நீட்டித்தது. 80,000 கோடி செலவில், ஏழைகளுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் ஆறு மாதங்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த திட்டத்தின் கடைசி தேதி 31 மார்ச் 2022 என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மார்ச் மாதத்திலேயே, இது 30 செப்டம்பர் 2022 வரை நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஏழை மக்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
கோவிட்-19 காரணமாக ஏழை மக்களுக்கு உதவுவதற்காக அரசு இலவச ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதே நேரத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே சுமார் 2.6 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இந்த திட்டம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக இத்திட்டத்தில் மேலும் 80,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவிடப்படும்.
மேலும் படிக்க: ரேஷன் கார்ட் இல்லாமலும் இலவசமாக ரேஷன் பொருட்களை பெறலாம்: இதோ வழிமுறை
பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், 2020-21 மற்றும் 2021-22ஆம் நிதியாண்டில், டிசம்பர் 6-ம்தேதி வரை மொத்தம் ரூ.1,72,358.13 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 75987138.23 மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 34,35,163.56 மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 22,05,638 மெட்ரிக் டன் தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதற்காக 10, 283.81 கோடி செலவு செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 364.69 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடுதலாக 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முடிமுடிவடையலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா (PMGKAY) என அழைக்கப்படும், இந்த திட்டம் ஏப்ரல்-மே 2020 இல் முதல் கொரோனா ஊரடங்கு போது தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை இலவச ரேஷன் திட்டத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) 80 அதிகமான பயனாளிகள் பயனைடைந்து உள்ளதாகவும் மற்றும் இது பரவலாக பிரபலமடைந்துள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கச் செலவினங்களைக் குறைக்க வேண்டும் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இலவச திட்டங்களுக்கான செலவினங்களைக் குறைப்பது குறித்து மோடி அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: எத்தனை வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன - நன்மைகள் மற்றும் இலவச பொருட்களின் விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR