முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (Former Union minister Jaswant Singh dies) ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) காலை காலமானார். அவருக்கு வயது 82. ஜஸ்வந்த் சிங்கின் மரணத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ட்விட்டரில் அறிவித்தார்.
ஜஸ்வந்த் சிங் மரணம் குறித்து ராஜ்நாத் சிங் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, முன்னாள் பாஜக தலைவர் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பல விதமான பொறுப்புக்களை வகித்து, தேசத்திற்கு சேவை செய்தார் என்றும் கூறினார்.
Deeply pained by the passing away of veteran BJP leader & former Minister, Shri Jaswant Singh ji. He served the nation in several capacities including the charge of Raksha Mantri. He distinguished himself as an effective Minister and Parliamentarian.
— Rajnath Singh (@rajnathsingh) September 27, 2020
ராஜஸ்தானில் பாஜகவை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார் .
பிரதமர் நரேந்திர மோடியும் ஜஸ்வந்த் சிங்கின் மரணம் குறித்து வருத்தத்தைத் தெரிவித்ததோடு, "ஜஸ்வந்த் சிங் ஜி நம் தேசத்திற்கான அரும் பணியாற்றினார், முதலில் ஒரு ராணுவ வீரராகவும் பின்னர் அரசியலிலும் அரும் பணியாற்றியுள்ளார், அடல் பிஹாரி வாழ்பாய் அவர்களின் ஆட்சியில் அவர் முக்கியமான இலாகாக்களைக் கையாண்டார். நிதி, பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரத்துறை என அனைத்தையும் சிறப்பாக கையாண்டார் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Jaswant Singh Ji served our nation diligently, first as a soldier and later during his long association with politics. During Atal Ji’s Government, he handled crucial portfolios and left a strong mark in the worlds of finance, defence and external affairs. Saddened by his demise.
— Narendra Modi (@narendramodi) September 27, 2020
1938, ஜனவரி 3ம் தேதி பிறந்த ஜஸ்வந்த் சிங் இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியாக இருந்தார். அவர் பாரதிய ஜனதாவின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் 1980 முதல் 2014 வரை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | BJP: புதிய குழுவை அறிவித்து முதல் முறையாக செய்த அதிரடி மாற்றங்கள் என்ன தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR