முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் உடல் நல குறைவு காரணமாக காலமானார்!
முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் கடந்த ஜூன் 11-ஆம் நாள் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் பரிந்துறையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரது நலன் குறித்து சிறப்பு கவனம் ஏற்றுக்கொள்ள மருத்துவர் ரண்டீப் குலேரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மேற்பார்வையில் வாஜ்பாயி அவர்களுக்கு கடந்த 9 வாரங்களாக மருத்துவ கண்கானிப்பு நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று இவரது உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாக டெல்லி AIIMS அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை துவங்கி வாஜ்பாய் அவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிய பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் சிறுநீர் குழாய் தொற்று காரணமாக இன்று மாலை 5.05 மணியளவில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Former Prime Minister & Bharat Ratna #AtalBihariVaajpayee passes away in AIIMS. He was 93. pic.twitter.com/r12aIPF5G0
— ANI (@ANI) August 16, 2018
நாட்டின் 11-வது பிரதமாரான அட்டல் பிஹாரி வாஜ்பாயி(93) அவர்கள் 1924-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் என்ற ஊரில் நடுத்தர் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
திருமண வாழ்வில் நாட்டம் காட்டாத இவர் 50 வருட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996-ஆம் ஆண்டு சிறுது காலமும், 1998-ஆம் ஆண்டில் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இரண்டாவது முறை பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நாட்டின் முன்னேற்றப் பாதை பல வழிகளில் சென்றது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றங்கள் பல கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.