சபரிமலை ஐப்பபன் கோயில்: மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறப்பு!!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் ஐந்து நாள் மாதாந்திர பிரார்த்தனை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) காலை முதல் தொடங்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2020, 08:44 AM IST
  • ஐந்து நாள் மாதாந்திர பிரார்த்தனைகள் மலையாள மாதமான சிங்கத்தில் நடைபெறுவது வழக்கம்.
  • கோயிலில் அனைத்து இடங்களிலும் COVID-19 வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை நிர்வாகம் உறுதி செய்யும்.
  • கோயிலுக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, எதிர்மறை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
சபரிமலை ஐப்பபன் கோயில்: மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறப்பு!! title=

பத்திணம்திட்டா: சபரிமலை ஐய்யப்பன் கோயில் (Sabarimala Ayyappa Temple) சன்னதி நேற்று திறக்கப்பட்டது. கோயிலின் ஐந்து நாள் மாதாந்திர பிரார்த்தனை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) காலை முதல் தொடங்கப்பட்டது. 5 நாட்கள் வரை திறந்திருக்கும் நிலையில் இன்று காலை தலைமை தந்திரி சுதீர் நம்பூதரி கோயிலைத் திறந்து பூஜைகளைத் தொடங்கினார். ஐந்து நாள் மாதாந்திர பிரார்த்தனைகள் மலையாள மாதமான சிங்கத்தில் நடைபெறுவது வழக்கம்.

இருப்பினும், கோயிலில் அனைத்து இடங்களிலும் COVID-19 வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை நிர்வாகம் உறுதி செய்யும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கோயிலுக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை (Corona Test) செய்துகொண்டு, அதற்கு எதிர்மறை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாத பூஜைக்குப் பிறகு ஆகஸ்ட் 21அன்று மாலை கோயில் மூடப்படும்.

ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2 வரை ஓணம் பூஜைகளுக்கும், நவம்பர் மாதம் வருடாந்திர திருவிழா யாத்திரை காலத்திற்கும் கோயில் மீண்டும் திறக்கப்படும். முன்னதாக, திருவாங்கூர் தேவஸ்தானம் தலைவர் என்.வாசு, சபரிமலைக்கான வருடாந்திர திருவிழா யாத்திரை காலம் நவம்பர் 16 முதல் தொடங்கும் என்று கூறினார்.

ALSO READ: சபரிமலை தரிசனம்: புதிய விதிமுறைகள், இந்த சான்று அவசியம்!!

"இது பல தசாப்தங்களாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. அரசாங்கமும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியமும் இந்த ஆண்டும் இந்த நிகழ்வு நடைபெறுவதையே விரும்புகின்றன. ஆனல், இவ்வாண்டின் நிகழ்வுகள் சில வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடக்கும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, இந்த ஆண்டிற்கான பக்தர்கள் வருகை செயல்முறை குறித்த உயர்மட்டக் கூட்டம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற்றது. சபரிமலை கோயிலுக்கு இந்த ஆண்டு வரும் பக்தர்கள் COVID-19 பரிசோதனை செய்துகொண்டு, கோவிடுக்கு எதிர்மறையான சான்றிதழை கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும் என உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காவல்துறையின் மெய்நிகர் வரிசை மேலாண்மை அமைப்பு (Virtual Queue management System) மூலம் நுழைவு கட்டுப்படுத்தப்படும். இதனால் அதிக அளவு கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும்.

ALSO READ: Corona Vaccine: இந்தியாவில் எங்கே .. எப்போது... என்ன விலை...!!!

Trending News