பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். இராணுவ நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடு இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. தகவல்களின்படி, தேடுதல் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4.35 மணி நேரத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியதாக ராணுவத்தின் தென்மேற்கு கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "ராணுவத்தின் நிலைய விரைவு நடவடிக்கை குழுக்கள் செயல்படுத்தப்பட்டன. அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன," என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.
Punjab: Four dead in firing at Bathinda Military Station, search ops on
Read @ANI Story | https://t.co/vGFBdYeCBH#Punjab #BathindaMilitaryStation #IndianArmy pic.twitter.com/oPEQaF9wZj
— ANI Digital (@ani_digital) April 12, 2023
மேலும் படிக்க | இந்தியாவில் மீண்டும் பீதியை கிளப்பும் கொரோனா.. ஒரே நாளில் 7830 பேருக்கு தொற்று!
பதிந்தா இராணுவ நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான குடிமகன் ஒருவர் அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளார் . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலையம் மூடப்பட்டுள்ளது. தற்போது தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் பதிண்டாவில் உள்ள ராணுவ கான்ட் நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் ANI செய்தி நிறுவனத்திடம் இது குறித்து கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு, ஒரு இன்சாஸ் துப்பாக்கி மற்றும் 28 தோட்டாக்கள் காணாமல் போனதாக புகார் வந்ததாக குறிப்பிட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ