அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தெலங்கானா மாநில விவசாயி 6 அடி சிலை வைத்து வழிபடும் விவகாரம் நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது!
தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஸ்சா கிருஷ்ணா. 32 -வயது விவசாயியான இவர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அபிமானி ஆவார். எனவே அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தனது வீட்டிலேயே 6 அடி உயர சிலை அமைத்து வழிபட்டு வருகின்றார்.
அதிபர் ட்ரம்பை கடவுளாக கருதி வரும் அவர், ட்ரம்பின் சிலையை புஸ்சா கிருஷ்ணா தினமும் வழிபட்டு வருகிறார். சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து, மாலை அணிவிக்கின்றார். அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டுகிறார். அப்போது, ‘ஜெய் ஜெய் டிரம்ப்’ என்று மந்திரம் உச்சரிப்பதுபோல் கூறுகிறார். கடந்த 14-ஆம் தேதி, ட்ரம்பின் 73-வது பிறந்தநாளையொட்டி தனது வீட்டு சுவற்றில் ட்ரம்ப் சுவரொட்டியை புஸ்சா கிருஷ்ணா ஒட்டி இருந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Telangana: Janagam-based Bussa Krishna installed a 6-feet statue of US President Donald Trump on the latter's birthday on June 14. He also performed 'abhishek' of the statue with milk. Krishna said, "I will offer prayers to the statue everyday" pic.twitter.com/LJsddXUmfD
— ANI (@ANI) June 18, 2019
இதுகுறித்து கிருஷ்ணாவிடம் வினவுகளையில், "ட்ரம்ப் ஒரு வலிமையான தலைவர். அவரது துணிச்சலான செயல்பாடு எனக்கு பிடிக்கும். எனவே, அவரை வழிபடுகிறேன். என்றாவது ஒருநாள் அவரை நான் நேரில் சந்திப்பேன்" என தெரிவித்துள்ளார்.
அதிபர் ட்ரம்பின் சிலை அமைக்க கிருஷ்ணா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவிட்டதாகவும், கிராம மக்களுக்கு விருந்து வைத்ததாகவும் அவருடைய தாயார் தெரிவித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகரீதியிலான மோதல் நடந்துவரும் நிலையில், அமெரிக்க அதிபருக்கு இந்தியர் ஒருவர் சிலை வைத்திருப்பது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.