Fact Check: இணையத்தில் வரும் எல்லாம் உண்மையல்ல, எச்சரிக்கும் #PIBFactCheck!!

இணையத்தில் நிலவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளைத் தடுப்பதற்காக பத்திரிகை தகவல் பணியகம் இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவை 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2020, 08:56 PM IST
  • பிரதம மந்திரி மந்தன் யோஜனாவின் கீழ் பயனாளிகளின் கணக்குகளில் 3,000 ரூபாயை அரசாங்கம் டெபாசிட் செய்வதாகக் கூறும் ஒரு யூடியூப் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளது.
  • இதுபோன்ற எந்தவொரு திட்டத்தின் கீழும் மத்திய அரசு மாதத்திற்கு 3000 ரூபாய் அளிக்கவில்லை - PIB
  • உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் – அரசாங்கம்.
Fact Check: இணையத்தில் வரும் எல்லாம் உண்மையல்ல, எச்சரிக்கும் #PIBFactCheck!! title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் (Corona Virus) இந்தியாவைத் தாக்கியதிலிருந்து ஏராளமான தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகள் சமூக ஊடகங்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றன. இணையத்தில் நாம் படிக்கும் அனைத்து செய்திகளும் உண்மை இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்போது, ​​பிரதம மந்திரி மந்தன் யோஜனாவின் (Pradhan Mantri Mandhan Yojana) கீழ் உள்ள அனைத்து பயனாளிகளின் கணக்குகளிலும் 3,000 ரூபாயை அரசாங்கம் டெபாசிட் செய்வதாகக் கூறும் ஒரு யூடியூப் வீடியோ (YouTube Video) ஒன்று சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளது. இருப்பினும், இதுபோன்ற எந்த அறிவிப்பும் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை என்பதையும் அந்த வீடியோ தவறாக வழிநடத்துகிறது என்பதையும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

போலி செய்திகளைப் பற்றிய உண்மையை விளக்கி, PIB, தனது ட்வீட்டில்,”ஒரு #YouTubeVideo-வில், பிரதம மந்திரி மந்தன் யோஜனாவின் கீழ் உள்ள அனைவரின் கணக்குகளிலும் மத்திய அரசு மாதத்திற்கு 3000 ரூபாய் ரொக்கத் தொகையை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

ALSO READ: வீட்டில் உட்கார்ந்த படி பணத்தை சம்பாதிக்கப்படும் இந்த திட்டத்தில் கவனமாக இருங்கள்

#PIBFactCheck: இந்த கூற்று போலியானது. இதுபோன்ற எந்தவொரு திட்டத்தின் கீழும் மத்திய அரசு மாதத்திற்கு 3000 ரூபாய் அளிக்கவில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இணையத்தில் நிலவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளைத் தடுப்பதற்காக பத்திரிகை தகவல் பணியகம் (Press Information Bureau) இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவை 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது.

"பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காண்பதுதான் இதன் நோக்கம்" என்று PIB கூறியுள்ளது.

இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், நம்பகமான ஆதாரங்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அரசாங்கம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.

ALSO READ: Tech Alert: உங்கள் வங்கிக் கணக்கை குறிவைக்கும் இந்த 34 App-களை தடை செய்தது Google

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News