புதுடில்லி: இந்திய பொருளாதாரத்தின் நிலையை பார்த்தால் மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. நாட்டின் வளர்ச்சி விகிதம் (GDP) இரண்டாவது காலாண்டில் 4.5% ஆக குறைந்துள்ளது. இது குறித்து, சிறந்த பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங், நமது பொருளாதாரம் கவலைக்குரிய நிலையை எட்டியுள்ளது என்று கூறியுள்ளார். நமது சமூகத்தின் நிலை கவலை அளிக்கும் வகையில் மோசமாகி உள்ளது என்று அவர் கூறியுள்ளார். தற்போது நமது பொருளாதாரத்தின் மீது ஏற்பட்டுள்ள அச்சத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். நமது பொருளாதாரம் 8% வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பொருளாதாரத்தின் நிலை தான் அதன் சமூகத்தின் நிலையை பிரதிபலிப்பாகும். இப்போது சமூக நம்பிக்கையின் தூண் உடைந்துவிட்டது, அதை சேர்க்க வேண்டும் என டாக்டர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, தோல்வியுற்ற மோடி எகனாமிக்ஸ் மற்றும் பக்கோரா எகனாமிக்ஸ் விஷன், இந்திய பொருளாதாரத்தை ஆழமாக வீழ்ச்சியில் மூழ்கடித்துள்ளதாக கூறியுள்ளார்.
சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்களை பார்த்தால், 4.5% என்பது கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு என்று அறியப்படுகிறது. முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5% ஆக இருந்தது. இரண்டாவது காலாண்டில் சுரங்க வளர்ச்சி 0.1%, கட்டுமான வளர்ச்சி 8.5% லிருந்து 3.3% ஆக குறைந்தது. உற்பத்தி வளர்ச்சி 6.9% லிருந்து 1% ஆக குறைந்தது. சேவைத் துறை வளர்ச்சி 7.3% லிருந்து 6.8% ஆக குறைந்தது. தொழில் வளர்ச்சி 6.7% லிருந்து 0.5 சதவீதமாக குறைந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் சில்லறை பண வீக்கம் அதிகரித்துள்ளது. வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அது 2017-18ல் 6.1% ஆக உயர்ந்துள்ளது. அக்டோபரில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஏற்றுமதி குறைந்தது. வங்கி மற்றும் வீட்டு நிதித்துறை சிரமங்களை எதிர்கொள்கிறது. ஆட்டோ, டெலிகாம், வங்கி உள்ளிட்ட பல துறைகளில் பணி நீக்கம் நடந்து வருகின்றன.
நவம்பர் 18 அன்று மக்களவையில், பொருளாதார மந்தநிலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது, ஆனால் ஜி-20 இல் இந்தியா பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அவர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், “2014-19 ஆம் ஆண்டில் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருந்தது, இது ஜி -20 நாடுகளில் மிக உயர்ந்ததாகும். உலக உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க மந்தநிலையை 2019 உலக பொருளாதார அவுட்லுக் (WEO) கணித்துள்ளது. ஆயினும்கூட, சமீபத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறிது குறைவு இருந்தபோதிலும், WEO மதிப்பீடுகளின்படி, ஜி -20 நாடுகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகும்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.