பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் உள்ள பி.ஜே.பி நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்பொழுது முன்பு வி.ஐ.பிக்கு(VIP) மக்கள் நாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், இன்றைய காலத்தில் நிலவும் வார்த்தை ஈபிஐ(EPI) ஆகும். ஈபிஐ என்பது ஒவ்வொரு நபர் முக்கியமானவர் என்று அர்த்தம்.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை தாக்கும் விதமாக பேசிய பிரதமர் மோடி, இந்த முறை கேரளாவில் இரண்டு விதமான அரசாங்கம் இயங்குகிறது. ஒன்று காங்கிரஸ் மாடல் மற்றொன்று இடதுசாரி மாடல். இரண்டு கட்சிகளின் மாடல் ஊழல் மற்றும் பயனற்ற ஆட்சியை தெளிவாகக் காட்டுகின்றன எனக் கூறினார்.
பி.ஜே.பி நிர்வாகிகளிடம் பேசிய போது வேணுகோபால் நாயர் பற்றியும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு பேசினார். வேணுகோபால் நாயரின் மரணம் எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதன் காரணமாக கேரளாவில் நமது கட்சி "பந்த்" போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.
இந்த சம்பவத்திலிருந்து பா.ஜ.க நிர்வாகிகள் ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள். நான் சொல்ல விரும்புகிறேன், தற்கொலை நடவடிக்கைகளை எடுக்காதீர்கள். நமது தேசத்தில் உள்ள 130 கோடி மக்கள் ஒன்றாக பேசும் போதுதான், அவர்களின் குரல் கேட்டக்ப்படும். எனவே நமது கோரிக்கைகளை மக்களிடம் வைப்போம். அவர்களிடம் எடுத்துச்சொல்வோம்.
இதை ஏன் உங்களிடம் கூறுகிறேன் என்றால், வியாழன் காலை கேரளா செயலகத்தின் முன் அய்யப்பன் பக்தன் வேணுகோபால் நாயர் தற்கொலை செய்து கொண்டார். இதை நீங்கள் செய்யக்கூடாது என்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோதி கூறினார்.